Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/வேர்க்கடலை கழுத்து அழுகல் நோய்க்கு கரைசல்

வேர்க்கடலை கழுத்து அழுகல் நோய்க்கு கரைசல்

வேர்க்கடலை கழுத்து அழுகல் நோய்க்கு கரைசல்

வேர்க்கடலை கழுத்து அழுகல் நோய்க்கு கரைசல்

PUBLISHED ON : மே 08, 2024


Google News
Latest Tamil News
வேர்க்கடலை சாகுபடியில், கழுத்து அழுகல் நோய் கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மையம் தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:

வேர்க்கடலை சாகுபடியில், கழுத்து அழுகல் நோய் ஏற்படும். இந்நோய், அஸ்பர்ஜில்லெஸ் னைஜர் என்கிற பூஞ்சாண வகையைச் சார்ந்தது. இது, மண் மற்றும் காற்றில் பரவும் பாலின வித்து வகை சார்ந்தது.

வேர்க்கடலை செடி முளைக்கும் முன்பே அழுகும். ஒரு சில நேரங்களில் முளைத்தாலும், நாற்று அழுகிவிடும்.

வேர்க்கடலை முதிர்ந்த பயிர்களில், கழுத்து அழுகலால் பாதிக்கப்படும்.

இதுபோல செய்யும் போது வருவாய் இழப்பு ஏற்படும்.

இதை தவிர்க்க, நோய் தாக்கப்பட்ட தாவரங்களை அகற்ற வேண்டும். மேலும், களைகளை கட்டுப்படுத்த வேண்டும். 1 ஏக்கருக்கு, 600 கிலோ மட்கிய தொழு உரம் போட்டு, உழவு ஓட்ட வேண்டும்.

இதுதவிர, 1 கிலோ விதைக்கு, 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி எடுத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். 1 கிலோ விதையுடன் கார்பென்டாசிம் உரத்தை கலந்து, 24 மணி நேரத்திற்கு பின் விதைக்கவும்.

மேலும், இரண்டரை கிலோ மண்ணில், டிரைக்கோடெர்மா விரிடி, 200 கிலோ வேப்பம் புண்ணாக்கு உடன் சேர்த்து போட வேண்டும். இவ்வாறு செய்தால், வேர்க்கடலை சாகுபடியில், கழுத்து அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா,

திரூர் நெல் ஆராய்ச்சி மையம்,

திருவள்ளூர்.

97910 15355.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us