களிமண் நிலத்திலும் அண்ணாசி சாகுபடி
களிமண் நிலத்திலும் அண்ணாசி சாகுபடி
களிமண் நிலத்திலும் அண்ணாசி சாகுபடி
PUBLISHED ON : ஏப் 10, 2024

களிமண் நிலத்தில், அண்ணாசி பழ சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தைச் சேர்ந்த, பொறியியல் பட்டதாரி எம்.பரத் கூறியதாவது:
ஏரி நீர் பாசனம் பெறக்கூடிய, களிமண் ரக நிலத்தில், உயரப்பாத்தி முறையில், ஈட்டி, வேங்கை, தென்னை, நாவல் உள்ளிட்ட பல்வேறு விதமான மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.
இதில், ஊடுபயிராக அண்ணாசி பழம் சாகுபடி செய்துள்ளேன். ஒவ்வொரு பழச்செடிக்கும், மற்றொரு பழச்செடிக்கும், 2 அடி இடைவெளி அவசியம் இருக்க வேண்டும்.
மலை மற்றும் செம்மண் நிலங்களில் விளையும் அண்ணாசி பழங்களை போல, களிமண் நிலத்தில் பெரிதாக வளரவில்லை. எனினும், 2 கிலோ எடையுடன் கூடிய பழமாக மகசூல் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எம்.பரத், 97899 96963.