/இணைப்பு மலர்/விவசாய மலர்/களிமண் நிலத்திலும் மணக்கும் வெட்டிவேர்களிமண் நிலத்திலும் மணக்கும் வெட்டிவேர்
களிமண் நிலத்திலும் மணக்கும் வெட்டிவேர்
களிமண் நிலத்திலும் மணக்கும் வெட்டிவேர்
களிமண் நிலத்திலும் மணக்கும் வெட்டிவேர்
PUBLISHED ON : மார் 27, 2024

வெட்டிவேர் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி கிராமத்தைச் சேர்ந்த சக்தி மகளிர் குழுவைச் சேர்ந்த நிர்வாகி பி.வளர்மதிகூறியதாவது:
மகளிர் குழுவைச் சேர்ந்த சிலர், தற்சார்பு முறையில் பாரம்பரிய ரக நெல், கத்தரி, வெண்டை, சிவப்பு நிற பொன்னாங்கண்ணி கீரை ஆகிய பலவித காய்கறிகளை ரசாயனம் இன்றி சாகுபடி செய்து வருகிறோம். காய்கறிகளில், குறைந்த மகசூல் கிடைத்தாலும், அதிக சுவையுடன் இருக்கிறது.
அந்த வரிசையில், களிமண் நிலத்தில், சோதனைக்கு பாத்தி முறையில் வெட்டிவேர் சாகுபடி செய்துள்ளேன். நம்மூர் களிமண்ணுக்கு அருமையாக வளர்கிறது.
குறிப்பாக, நீரோட்டம் இருக்கும் வரப்புகளில் சாகுபடி செய்தால், 9 மாதங்களுக்கு பின் வெட்டி வேரில் நல்ல மகசூல் கிடைக்கிறது. இது, ஒரு கிலோ, 150 ரூபாய் வரையில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. உலர்த்தி மாலையாக தொடுத்து விற்பனை செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: பி.வளர்மதி,
80982 58089.