PUBLISHED ON : ஜன 31, 2024

பயிர்களில் தீங்கு செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் இயற்கை தந்த நன்கொடை தான் பூச்சிகளின் இயற்கை எதிரிகள். உயிருள்ள இயற்கை உயிரினங்களைக் கொண்டு தீங்கு செய்யும் பூச்சியினங்களைக் கட்டுப்படுத்துவது உயிரியல் முறை பூச்சி மேலாண்மை என்று பெயர். உயிரியல் காரணிகளை சாறுண்ணிகள், ஒட்டுண்ணிகள், நோய்க்கிருமிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
சாறுண்ணிகள் அல்லது இரை விழுங்கிகள் உருவில் பெரியவை. சுறுசுறுப்பாக வேகமாக நகரும் குணம் கொண்டவை. கூர்மையான பார்வைத்திறனைக் கொண்டிருப்பதால் இவற்றைவிட உருவில் சிறிய பூச்சிகளை அதிக எண்ணிக்கையில் உண்ணும் திறன் படைத்தவை. அன்றாடம் பார்க்கும் தட்டான், ஊசித்தட்டான் போன்றவை சாறுண்ணி வகையைச் சார்ந்தவையே.
குளவி மற்றும் ஈ இனத்தைச்சேர்ந்த பூச்சிகள் மற்ற பூச்சிகளில் வளர்ந்து தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளும். இந்த ஒட்டுண்ணிகள் உருவில் சிறியவை, இரையைத் தேடிச்சென்று அவற்றுள் முட்டையிடும். இவை இரையை உடனடியாகக் கொன்று உண்பதில்லை. இரையின் முட்டை, புழு, கூட்டுப்புழு முட்டையிடும். முட்டை பொரித்து புழு வளர்ந்து ஒட்டுண்ணியாக வெளிவரும் வரை இவற்றின் இரை உயிருடனேயே இருக்கும். இந்த ஒட்டுண்ணிகளை முட்டை ஒட்டுண்ணி, புழு ஒட்டுண்ணி, கூட்டுப்புழு ஒட்டுண்ணி எனலாம்.
முட்டை ஒட்டுண்ணி பூச்சியின் முட்டைகளைத்தேடிப் பிடித்து அதன் மீது தன் சிறிய முட்டையை இடுவதால் பூச்சியின் முட்டை முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. உதாரணமாக டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியைக்கூறலாம்.
புழு ஒட்டுண்ணி நேரடியாக எதிரி பூச்சிகளின் புழுக்களினுள் தன் முட்டைகளை இடுவதால் எதிரி புழுக்கள் ஒட்டுண்ணியின் வளர்ச்சியால் பாதிக்கப்பட்டு மடிந்து விடும். பிரக்கான், பெதிலிட் போன்றவை புழு ஒட்டுண்ணிகள். கூட்டுப்புழு ஒட்டுண்ணியானது பூச்சிகளின் கூட்டுப்புழுக்களினுள் தன் முட்டைகளை இடுவதால் பூச்சிகள் கூட்டுப்புழு பருவத்திலேயே அழிக்கப்படுகின்றன. ஈலோபிட் கூட்டுப்புழு ஒட்டுண்ணியை உதாரணமாக குறிப்பிடலாம்.
நெல் மற்றும் வாழைப் பயிர்களில் நோய்களை கட்டுப்படுத்தும் சூடோமோனஸ் பாக்டீரியா குறைந்த செலவில் அதிக மகசூல் பெற உதவும். நெற்பயிரைத் தாக்கும் குலைநோய், இலைப்புள்ளி நோய், இலை உறை அழுகல் நோய், வாழையை தாக்கும் வாடல் நோய், பருத்தி, பயறு வகைகளை தாக்கும் வேரழுகல், தண்டழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்துகிறது.
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக விதைநேர்த்தி செய்ய வேண்டும். ஒரு எக்டேருக்கு 2.5 கிலோ வீதம் நெல் நாற்று வேர்களை நனைத்து நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயலில் இடவேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளித்து நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
டிரைக்கோடெர்மா விரிடி நன்மை செய்யும் பூஞ்சாணம். செடிகளின் வேர்களைச் சுற்றி பூசண இழைகளால் பாதுகாப்பு வளையம் அமைத்து நோய்க்கிருமி தாக்காமல் பயிரை பாதுகாக்கிறது. பருத்தி, கம்பு, பயறு வகைகள், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மஞ்சள், காய்கறி, பழப்பயிர்களை தாக்கும் வாடல், தண்டழுகல், வேரழுகல் நோய்களை கட்டுப்படுத்தும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் சேர்த்து 24 மணி நேரத்திற்கு பின் விதைக்க வேண்டும். ஒரு கிலோ விரிடியை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். கரணைக்கிழங்கு நேர்த்திக்கு 500 கிராம் விரிடியை 200 லிட்டர் தண்ணீரில் 5 முதல் 10 மணி நேரம் ஊறவைத்து நடவேண்டும்.
மெட்டாரைசியம் அனிசோபிலே பூஞ்சாணம் மக்காச்சோள படைப்புழு, காண்டாமிருக வண்டு, கூன்வண்டு, அசுவினி, வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, இலைப்பேன், சிலந்திப்பேன், மலைப்பயிர், காய்கறி பயிர்களைத் தாக்கும் வேர்வண்டு புழுக்களை தாக்கி அழிக்கிறது. ஒரு கிலோ பூஞ்சாணத்தை 100 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயலில் இடவேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 8 கிராம் கலந்து தெளிக்கலாம். ஒரு எக்டேருக்கு 4 கிலோ பூஞ்சாணம் கலந்து பயன்படுத்தலாம். காண்டாமிருக வண்டுகளின் இளம்புழுக்களை கட்டுப்படுத்த 750 மில்லி தண்ணீரில் 250 கிராம் பூஞ்சாணம் கலந்து எருக்குழியில் தெளிக்க வேண்டும்.
டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணி நெல்லில் இலைச்சுருட்டுப்புழு, கரும்பில் இடைக்கணு புழு, கத்திரி, வெண்டை, தக்காளி பயிர்களில் காய்ப்புழு, பருத்தியில் காய்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும். நெல்லில் 37 வது நாளில் 7 நாட்கள் இடைவெளியில் 3 முறை முட்டை ஒட்டுண்ணி அட்டையை நுாலில் கட்டி விட வேண்டும். கரும்பில் 120 வது நாளில் 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை கட்ட வேண்டும். கத்தரி, வெண்டை, தக்காளியில் 50 சதவீத பூப்பூக்கும் பருவத்தில் 10 நாட்கள் இடைவெளியில் 6 முறை கட்ட வேண்டும். பருத்தியில் 40 வது நாளில் 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை கட்ட வேண்டும். இவை கட்டும் போது ரசாயன உரம் தெளிக்கக்கூடாது. முட்டை ஒட்டுண்ணி வெயில் படும் போதுகுளவியாக பொரிந்து வெளிவரும். எனவே இவற்றை காலை, மாலை வேளையில் கட்ட வேண்டும்.
இவை தீங்கு செய்யும் எதிரி பூச்சிகளின் முட்டையின் மேல் முட்டையிட்டு அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும். மழைக்காலத்தில் முட்டை ஒட்டுண்ணியை கட்டக்கூடாது. வரப்பிலிருந்து 2 அடி தள்ளி ஏற்ற இறக்க முறைப்படி 10 இடங்களில் கட்டி விடலாம்.
இவை அனைத்தும் மேலுார் நீர்ப்பாசன பயிற்சி மைய வளாகத்தில் உள்ள உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகங்களில் கிடைக்கும். அனைத்து வேளாண் வட்டார விரிவாக்க மையங்களில் கிடைக்கும். டிரைக்கோ கிரம்மா முட்டை ஒட்டுண்ணியை விவசாயிகள் கேட்கும் போது தான் உற்பத்தி செய்ய முடியும்.
- சக்திகணேஷ்வேளாண் உதவி இயக்குநர் மேலுார்ஜெயந்திவேளாண் அலுவலர் மதுரை