PUBLISHED ON : ஜூலை 10, 2024

நீர் மட்டத்திற்கு மேலிருக்கும் நெற்பயிரின் அடிப்பகுதியில் புகையான் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்பூச்சிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். புகையான் தாக்கப்பட்ட பயிர்கள் காய்ந்து தீய்ந்த மாதிரி இருக்கும். முதிர்ச்சியடைந்த பயிர்கள் காய்ந்து வட்ட திட்டுகளாக மாறி பயிர்கள் சாய்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறை
நெருக்க நடவு முறையைத் தவிர்க்க வேண்டும். தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களையும் தண்ணீர் பாய்ச்சுவதையும் தவிர்க்க வேண்டும். விளக்கு பொறி அமைத்து புகையானை கவர்ந்து அழிக்கலாம். பகலில் மஞ்சள் நிற பொறிகளை பயன்படுத்தவேண்டும்.
பாஸ்போமிடான் 1000 மில்லி அல்லது மோனோகுரோட்டாபாஸ் 1250 மில்லி அல்லது பாஸலோன் 1500 மில்லி மருந்தைத் தெளித்து புகையானைக் கட்டுப்படுத்தலாம். வயலில் நன்றாக தண்ணீர் வடிந்த பிறகு மருந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 6 லிட்டர் வேப்ப எண்ணெய் அல்லது 400 மில்லி அசாடிராக்டின் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
பழுப்பு இலைத் தத்துப்பூச்சிகளின் தாக்குதல் அதிகமானால் இயற்கை எதிரியான நாவாய்ப் பூச்சிகளை எக்டேருக்கு 200 முதல் 250 எண்ணிக்கையில் 10 நாட்கள் இடைவெளியில் விடுவிக்க வேண்டும்.