/இணைப்பு மலர்/விவசாய மலர்/கணிசமான வருவாய்க்கு வாசனை சீரக சம்பா நெல்கணிசமான வருவாய்க்கு வாசனை சீரக சம்பா நெல்
கணிசமான வருவாய்க்கு வாசனை சீரக சம்பா நெல்

PUBLISHED ON : ஜூலை 03, 2024

வாசனை சீரக சம்பா சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:
களிமண் கலந்த நிலத்தில், வாசனை சீரக சம்பா பாரம்பரிய ரக நெல்லை, ஒன்றை நாற்று நடவு முறையில் நடவு செய்துள்ளேன். இது, 135 நாட்களுக்கு பின் அறுவடைக்கு வரும்.
குறிப்பாக, பாரம்பரிய ரக நெல்லை பொருத்தவரையில், ஒற்றை நாற்று முறையில் நடவு செய்வது தான் சிறந்தது. காரணம், நாற்று களைப்பு திறன் அதிகமாக இருக்கும். பராமரிப்பு செலவு மற்றும் இயற்கை உரங்களின் பயன்பாடு செலவு குறைவாக இருக்கும்.
இந்த நெல்லில் நெற்கதிர் வரும்போது, சீரகத்தின் வாசம் எப்படி வீசுமோ அப்படி நல்ல மணத்துடன் இருக்கும். அதனால், தான் வாசனை சீரக சம்பா என, பெயிரிடப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு, 1,600 கிலோ வரையில் மகசூல் பெறலாம். இதை, மூன்று மாதங்களுக்கு பின் அரிசியாக மாற்றி விற்பனை செய்யும் போது கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி. குகன், 94444 74428.