Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/நாட்டுக்கோழி பண்ணைகளில் எலிகளை கட்டுப்படுத்தலாம்

நாட்டுக்கோழி பண்ணைகளில் எலிகளை கட்டுப்படுத்தலாம்

நாட்டுக்கோழி பண்ணைகளில் எலிகளை கட்டுப்படுத்தலாம்

நாட்டுக்கோழி பண்ணைகளில் எலிகளை கட்டுப்படுத்தலாம்

PUBLISHED ON : ஏப் 30, 2025


Google News
Latest Tamil News
நாட்டுக்கோழி பண்ணைகளில், எலிகள் கட்டுப்படுத்துவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:

நாட்டுக்கோழி பண்ணைகளில் எலிகளின் தொல்லை அதிகமாக காணப்படுகின்றன. குறிப்பாக,சுண்டெலி, கூரை எலி, பெருச்சாளி ஆகியவற்றின் தொல்லையால், நாட்டுக்கோழி குஞ்சுகள் இறக்க நேரிடும்.

மேலும், ஒரு எலி 25 கிராம் தீவனத்தைஉட்கொள்ளும். இது தவிர, கோழிப்பண்ணை களின் கூரை மற்றும் தரையில் துளை போட்டு விடும். இந்த ஓட்டைகளின் வழியாக விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால், கோழி வளர்ப்பில் இழப்பீடு ஏற்படும்.

இதை தவிர்க்க, நாட்டுக்கோழி பண்ணையைசுற்றிலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பண்ணை அருகே, எலிப்பொறிகள் அமைக்கலாம். தீவன மூட்டைகள் அடுக்கும் போது, கொட்டகையில் சேதம் ஏற்படாத இடத்தில் தீவன மூட்டைகள் அடுக்க வேண்டும்.

மேலும், எலிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளைகலக்கி, பாதை வழியாக தெளிக்கலாம். இதன்வாயிலாக, நாட்டுக்கோழி பண்ணைகளில், இழப்பீடு இல்லாத வருவாய்க்கு வழி வகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: கே.பிரேமவல்லி,

97907 53594






      Our Apps Available On




      Dinamalar

      Follow us