Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/இயற்கை உரங்களை பயன்படுத்தி நஞ்சு இல்லாத தக்காளி சாகுபடி

இயற்கை உரங்களை பயன்படுத்தி நஞ்சு இல்லாத தக்காளி சாகுபடி

இயற்கை உரங்களை பயன்படுத்தி நஞ்சு இல்லாத தக்காளி சாகுபடி

இயற்கை உரங்களை பயன்படுத்தி நஞ்சு இல்லாத தக்காளி சாகுபடி

PUBLISHED ON : மார் 26, 2025


Google News
Latest Tamil News
தக்காளி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம்மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை சாகுபடி விவசாயி பா.ரமேஷ் கூறியதாவது:

மணல் கலந்த களிமண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன். அனைத்து விளைப்பொருட்களுக்கும், ரசாயன உரங்கள் பயன்பாடு அறவே தவிர்த்துள்ளேன்.

குறிப்பாக, இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைப்பொருட்களை சாகுபடி செய்து, நகரங்களில் விற்பனை செய்து வருகிறேன். பழ வகைகள், காய்கறிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கிராம மக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இருப்பினும், நஞ்சு இல்லாத விளைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலான மக்கள் இடையே இல்லை.

ரசாயன உரங்கள் பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும் தக்காளி புளிப்பு தன்மை குறைவாகவே இருக்கும்.

இயற்கை உரங்களைபயன்படுத்தி சாகுபடி செய்யும் தக்காளி யின்தன்மை அதிக புளிப்புசுவையுடன் காணப் படும். உதாரணமாக, ரசாயன உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் தக்காளி, ஐந்துபயன்படுத்துகிறோம் என, எடுத்துக் கொள்வோம்.

ரசாயனமின்றி விளைவிக்கப்படும் தக்காளி இரு தக்காளி போதும். கூடுதலாக புளிசேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.

தக்காளி சாகுபடியை பொறுத்தவரையில், குறைந்த நிலப்பரப்பில் சாகுபடி செய்தால், ஒரு ஏக்கர் நெல் சாகுபடியில் கிடைக்கும் வருவாய் ஈட்ட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: பா. ரமேஷ்,

81109 44475.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us