Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விண்வெளி துறையில் சேர விருப்பமா

விண்வெளி துறையில் சேர விருப்பமா

விண்வெளி துறையில் சேர விருப்பமா

விண்வெளி துறையில் சேர விருப்பமா

PUBLISHED ON : மார் 12, 2024


Google News
Latest Tamil News
மத்திய விண்வெளி துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆமதாபாத்தில் உள்ள பிசிக்கல் ரிசர்ச் ஆய்வகத்தில் (பி.ஆர்.எல்.,) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உதவியாளர் 10, ஜூனியர் பெர்சனல் உதவியாளர் 6 என மொத்தம் 16 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். பெர்சனல் உதவியாளர் பணிக்கு கூடுதலாக தட்டச்சு திறன் தேவைப்படும்.

வயது: 31.3.2024 அடிப்படையில் 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500, பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 31.3.2024

விவரங்களுக்கு: prl.res.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us