Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தமிழக பள்ளிகளில் 1768 ஆசிரியர் பணியிடங்கள்

தமிழக பள்ளிகளில் 1768 ஆசிரியர் பணியிடங்கள்

தமிழக பள்ளிகளில் 1768 ஆசிரியர் பணியிடங்கள்

தமிழக பள்ளிகளில் 1768 ஆசிரியர் பணியிடங்கள்

PUBLISHED ON : பிப் 13, 2024


Google News
Latest Tamil News
தமிழக அரசுப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் பிரிவில் 1768 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 படிப்புடன் இரண்டாண்டு துவக்கக்கல்வி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு - தாள் 1ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1.7.2024 அடிப்படையில் 53 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300

கடைசிநாள்: 15.3.2024 மாலை 5:00 மணி.

விவரங்களுக்கு: trb.tn.gov.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us