Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/10 ஆண்டு கால செயல்பாடுகள் அடிப்படையில் தேர்தலை சந்திக்கிறோம்: அமித்ஷா பேச்சு

10 ஆண்டு கால செயல்பாடுகள் அடிப்படையில் தேர்தலை சந்திக்கிறோம்: அமித்ஷா பேச்சு

10 ஆண்டு கால செயல்பாடுகள் அடிப்படையில் தேர்தலை சந்திக்கிறோம்: அமித்ஷா பேச்சு

10 ஆண்டு கால செயல்பாடுகள் அடிப்படையில் தேர்தலை சந்திக்கிறோம்: அமித்ஷா பேச்சு

PUBLISHED ON : மார் 06, 2024


Google News
மும்பை : ‛‛ கடந்த 10 ஆண்டு கால பா.ஜ., அரசின் செயல்பாடுகள்; அடுத்த 25 ஆண்டுக்கான திட்டங்கள் அடிப்படையில் தேர்தலை சந்திக்க உள்ளோம்'' என மும்பையில் நடந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

மும்பையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் அமித்ஷா பேசியதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. ஆனால், பாஜ., ஆட்சியில் தான் அது 5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்கப்பட்டது.

கொள்கையால் செயல்படும் நாடாக இந்தியா மாறி உள்ளது. கடந்த 10 ஆண்டுகால செயல்பாடுகள், மற்றும் அடுத்த 25 ஆண்டுக்கான திட்டங்கள் அடிப்படையில் வரும் லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளோம். பிரதமர் மோடி கொள்கை மிக்க தலைவராக உள்ளார். 2047 க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா 4 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும். 2025 ம் ஆண்டிற்குள் விண்வெளி மையம் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த 2 ஆண்டுகளில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us