PUBLISHED ON : ஏப் 28, 2024

கோவா, இஞ்சூலி கிராமத்தை சேர்ந்த, ராமச்சந்திரன், 'விசில்' அடித்தால், சில நொடிகளில் ஏராளமான முதலைகள், அவர் முன் ஆஜராகும். இவர், 19 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், ஏரிக்கரையில் நின்றிருந்த போது, இரண்டு முதலை குஞ்சுகள் காயம்பட்டு தத்தளித்துக் கொண்டிருந்தன.
உடனடியாக அவைகளுக்கு மருத்துவ உதவி செய்து, மீண்டும் தண்ணீருக்குள் விட்டார். அந்த இரண்டு குஞ்சுகள் வளர்ந்து, 22 வாரிசுகளை உருவாக்கின.
இன்று, ராமசந்திரன், 'விசில்' அடித்தால், இந்த முதலை கூட்டம் பாய்ந்து வந்து, அவர் அளிக்கும் உணவை சாப்பிட்டு விட்டு, திரும்பி போய் விடும்.
தினம் இரண்டு முறை, அவர், முதலைகளுக்கு உணவு அளித்து வருகிறார். அந்த ஏரியில் குளிக்க வருவோர் யாரையும் முதலைகள் தாக்குவது இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. ராமச்சந்திரன் வெளியூர் எங்காவது சென்று விடும்போது, அவரை காணாமல் தவித்து விடுமாம், இந்த முதலைகள்.
— ஜோல்னாபையன்