Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/சம்மர் ஸ்பெஷல்! - கோடையை குளிர்விக்க!

சம்மர் ஸ்பெஷல்! - கோடையை குளிர்விக்க!

சம்மர் ஸ்பெஷல்! - கோடையை குளிர்விக்க!

சம்மர் ஸ்பெஷல்! - கோடையை குளிர்விக்க!

PUBLISHED ON : ஏப் 21, 2024


Google News
Latest Tamil News
பதநீரும், நுங்கும்!

பதநீரில் நுங்கைத் தோலுடன் கசக்கிப் போட்டு குடித்தால், பித்தமும், சூடும் தணியும்; மலச்சிக்கல் சரியாகும். குறிப்பாக, 'லைப் ஸ்டைல்' காரணமாக இன்றைய தலைமுறையினர் அதிகமாக, 'டென்ஷன்' அடைவர். இதனால், அவர்களது உடம்பில், 'அசிசிட்டி' உற்பத்தியாகி, வாயு கோளாறு உருவாகிறது. பதநீரும், நுங்கும் இந்த பிரச்னையை வேரோடு அழிக்கும். தவிர, இதில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் என்பதால், உடம்புக்கு வலிமையைத் தரும்.

மாங்காய் பானகம்!

'ஹீட் ஸ்டிரோக்' வராமல் தடுக்கும் இந்த பானகம். மாங்காய் துண்டுகள், இஞ்சி, உப்பு, வெல்லம் எல்லாவற்றையும் அரைத்து வடிகட்டி, தேவையான தண்ணீருடன் கலந்து கொண்டால் போதும்.

கீரை சர்பத்!

வல்லாரை, அரைக்கீரை, சிறுகீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை இவற்றில் ஒன்றை இஞ்சியுடன் சேர்த்து வேகவைத்து, வடிகட்டி, தேனுடன் கலந்து சாப்பிட, அத்தனை சத்துக்களும் கிடைக்கும்.

நன்னாரி சர்பத்!

நன்னாரி வேரின் நடுவில் வெள்ளையாக இருப்பதை எடுத்துப் போட்டுவிட்டு, மற்ற வேர்ப்பகுதியை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதை வடிகட்டி, அப்படியே இரவு முழுக்க வைக்க வேண்டும். காலையில் அதனுடன் தேன் அல்லது வெல்லம் கலந்து குடிக்கலாம். உங்கள் மொத்த ரத்தமும் சுத்தமாகும்.

பழைய சாத தண்ணீர்!

இதில், நிறைய பி12 உள்ளது. வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்ணை போக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும்; புற்றுநோய் வராமலும் தடுக்கும்.

செம்பருத்தி!

ஒற்றை இதழ் சிகப்பு செம்பருத்திப்பூ, இஞ்சி, புதினா, லவங்கம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறவிட்டு, இதனுடன் தேன் அல்லது வெல்லம் சேர்த்து குடிக்கலாம். புற்றுநோய் வராது, முதுமை நெருங்காது, இதயம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.  





      Our Apps Available On




      Dinamalar

      Follow us