PUBLISHED ON : ஏப் 14, 2024

'டைம் டிராவல்' கதையில், ரஜினி!
தமிழ் சினிமாவில், நேற்று இன்று நாளை உள்ளிட்ட சில படங்கள், 'டைம் டிராவல்' கதையில் உருவானவை. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும், 171வது படமும், 'டைம் டிராவல்' கதையில் உருவாகிறது.
இந்த கதையில், நிகழ்காலத்திலிருந்து இறந்த காலத்துக்கு செல்வதும், நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு சென்று திரும்பி வருவதுமான, காலகட்டங்கள் இடம்பெறப் போகிறது. அதனால், இப்போது இருப்பதை விட, இளமையான மற்றும் முதுமையான, 'கெட் - அப்'பில் இப்படத்தில், நடிக்கப்போகிறார், ரஜினி.
— சினிமா பொன்னையா
'பாக்சிங்' பயிற்சி பெற்ற, மீனாட்சி சவுத்ரி!
விஜயின், கோட் படத்தில் நடித்து வரும், மீனாட்சி சவுத்ரிக்கு, அப்படத்தில் ஒரு, 'ஆக் ஷன்' காட்சி உள்ளது. இந்த காட்சியில் நடிப்பதற்கு முன், தாய்லாந்து நாட்டுக்கு சென்று, பயிற்சியாளரிடம், 'பாக்சிங்' பயிற்சி எடுத்து வந்து, மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேலும், 'அநியாயத்தை தட்டிக்கேட்கும் அதிரடியான, 'ஆக் ஷன்' கதைகளில் நடிக்க வேண்டும் என்பதே என் எதிர்கால திட்டம். அதற்கும், இந்த, 'பாக்சிங்'கை பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன்...' என்கிறார், மீனாட்சி சவுத்ரி.
— எலீசா
அக்கட தேசத்திற்கு கிளம்பிய, அட்லி!
விஜய் நடிப்பில், தெறி, மெர்சல் மற்றும் பிகில் என, அடுத்தடுத்து படங்களை இயக்கிய, அட்லி, மீண்டும், விஜயை இயக்க ஆசைப்பட்டு, அவருக்காக, 'ஸ்கிரிப்டும்' எழுதினார். ஆனால், விஜயோ, நடிப்புக்கு முழுக்குப் போடப் போவதாக சொல்லி, அட்லிக்கு, 'குட் பை' சொல்லி, அனுப்பி விட்டார்.
அதனால், விஜய்க்கு உருவாக்கிய அதே கதையை, தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுனிடம் சொல்லி, ஓ.கே., பண்ணிய, அட்லி, அவரை இயக்க தயாராகி வருகிறார். அதையடுத்து மீண்டும், ஷாருக்கானை வைத்து, ஜவான் படத்தின், இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
கொலவெறி இசையமைப்பாளரை, சினிமாவுக்கு கொண்டு வந்தவரே, சுள்ளான் நடிகர் தான். எனினும், ஒரு கட்டத்தில், அவரது எதிரி நடிகர்களில் ஒருவரான, மெரினா நடிகருடன் சேர்ந்து, சுள்ளானுக்கே எதிராகி விட்டார், கொலவெறி.
இதனால், கொலவெறியின் மார்க்கெட்டை சரிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள சுள்ளான், தன் படங்களிலிருந்து அவரை முழுவதுமாக கத்தரித்து விட்டார். மேலும், தன் அபிமான இயக்குனர்கள், நடிகர்களின் படங்களில் இருந்தும் கொலவெறியை கத்தரிக்க வைத்து விட்டார்.
மாறாக, பிரகாசமான அந்த இசையமைப்பாளருக்கு சிபாரிசு செய்து, கொலவெறிக்கு எதிராக, அவரை கொம்பு சீவி விட்டுள்ளார், சுள்ளான். இதன் காரணமாக, திரை மறைவில், கொலவெறிக்கும், பிரகாசமான இசையமைப்பாளருக்கும் இடையே, 'நீயா - நானா' மோதல், வெடித்து நிற்கிறது.
சினி துளிகள்!
* மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும், ட்ரெயின் படத்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் வில்லன் வேடத்தில் நடிக்கிறார், நாசர்.
* வைப் குமார் படத்தில், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக, விருமன், மாவீரன் படங்களில் நடித்த, அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.
* தன் படங்களில் இசையமைக்க, தொடர்ந்து, அனிருத்துக்கு சிபாரிசு செய்து வந்த, தனுஷ், தற்போது, ஜி.வி.பிரகாஷுக்கு சிபாரிசு செய்கிறார்.
* சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கமல் நடித்த, சத்யா படம், மீண்டும் தமிழில், 'ரீ மேக்' செய்யப்படுகிறது. அதில், கமல் வேடத்தில், அசோக் செல்வன் நடிக்கிறார்.
* இருட்டு அறையில் முரட்டுக்குத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள, யாஷிகா ஆனந்த், தற்போது, படிக்காத பக்கங்கள் என்ற, திகில் படத்தில் நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!