Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!

PUBLISHED ON : மார் 17, 2024


Google News
Latest Tamil News
வீட்டிற்கு வெளியே செய்ய வேண்டியவை:

*  மொட்டை மாடியில், மாடித் தோட்டம் அமைக்கலாம். கடினமான துணிகளை பயன்படுத்தி பந்தலும் போடலாம். மாடித்தோட்டம் அமைக்க முடியாதவர்கள், தொட்டியில் செடிகளை வளர்க்கலாம். காலை - மாலை என, இரு வேளையும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம்.

* வெளிப்புற சுவரில், 'ஆன்டி ஹீட்' என்ற வகை பெயின்ட் அடிப்பதால், வெயிலின் தாக்கத்திலிருந்து வீட்டைக் காக்கும்.

* அடுக்குமாடி குடியிருப்பை தவிர்த்து தனி வீடுகளில் வசிப்பவர்கள், 'புளூ மெட்டல் ஷீட்' கொண்டு மொட்டை மாடியில் ஷெட் போடலாம். இதனால், வெயிலால் ஏற்படும் வெக்கையையும், சூட்டையும் வீட்டிற்குள் இறங்காதவாறு தடுக்கும்.

* இரும்பு தகரத்தால், ஷெட் போட்டிருப்பவர்கள், தகரத்தின் மீது ஓலை அல்லது தென்னை இலைகளை போடலாம். இது வெயிலின் தாக்கத்தையும், அறைக்குள் வெப்பம் இறங்குவதையும் தடுக்கும்.     





      Our Apps Available On




      Dinamalar

      Follow us