Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/வாசகர்கள் சொல்கிறார்கள்!

வாசகர்கள் சொல்கிறார்கள்!

வாசகர்கள் சொல்கிறார்கள்!

வாசகர்கள் சொல்கிறார்கள்!

PUBLISHED ON : பிப் 11, 2024


Google News
Latest Tamil News
* தினமலர் - வாரமலர், தங்கத் தகட்டில், வைர எழுத்துக்களால், பதிக்கப்பட்ட பொக்கிஷம். அவரவர் ரசனைக்கேற்ப, பல்சுவை தகவல்களை அள்ளித் தெளிக்கும் ஆசிரியரின் புத்தி கூர்மைக்கு, எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்தி, வணங்குகிறோம். தொடரட்டும் நற்பணி.

— டி.பி.முத்துக்குமார், திண்டுக்கல்.

* முதல் பக்கம் துவங்கி கடைசி பக்கம் வரை, வாரமலர் இதழில் ஒவ்வொரு அங்குலமும் தங்க நகை போல் அலங்கரிக்கப்படுகிறது.

- பி. கோபி. கிருஷ்ணகிரி.

* மலர்கள் எத்தனை வந்தாலும், வாரமலர் இதழுக்கு ஈடாகுமா? குறை எதுவும் இல்லையே என்ற குறை மட்டுமே உள்ள ஒரே இதழ், தினமலர் - வாரமலர். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் நம்மை ஏங்க வைப்பது வாரமலர் இதழ் ஒன்றுதான்.

- எஸ்.லலிதா, களக்காடு

* வாரமலரின் ஒவ்வொரு பக்கமும் விலை மதிப்பற்றது! எதையுமே தவறவிட முடியவில்லை. வாழ்த்துக்கள் வாரமலர் இதழுக்கு!

—வி. ரவீந்திரன், ஈரோடு.

* ஆண்டுகள் பல கடந்தாலும்

அதே புத்துணர்வுடன் வாசகர்களுக்கு தேவையான செய்திகளை வழங்குவதில் வாரமலர் இதழுக்கு நிகர் வாரமலர் தான்.

— ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம், திருவள்ளூர்.

* திருநெல்வேலியில் அல்வா, திருப்பதியில் லட்டு, பழனியில் பஞ்சாமிர்தம், தமிழ் இதழ்களில் தினமலர் - வாரமலர் என்றும் வாடாத மலர்!

— வி. சேதுமாதவன், களக்காடு.

* வாரமலர் இதழ், எனக்கு, ஒரு வரப்பிரசாதம். என் எண்ணங்களை கடிதமாக்கும் அற்புத புதையல். என்னை எழுத்தாளராக்கிய சிறந்த தாய்!

— எம். ருக்குமணி, கள்ளக்குறிச்சி.

* வர வர வாரமலர் இதழுக்கு வயசு குறைந்து கொண்டே போவதால், செய்திகளும் தேன் போல இனிக்கிறது. வாரமலர் இதழ், தமிழருக்கு கிடைத்த வரம்.

—க. நாகமுத்து, திண்டுக்கல்.

* என் இனிய தோழி வாரமலர் இதழுக்கு, உன்னில் உதயமாகும் அனைத்து அம்சங்களும் அருமை. கரும்பை நுனியில் இருந்து அடி வரை சுவைப்பது போல, ஒவ்வொரு பக்கமும் சுவையாக உள்ளது.

- நா. பாரதலெட்சுமி சுந்தர், தூத்துக்குடி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us