/இணைப்பு மலர்/வாரமலர்/ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (15)ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (15)
ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (15)

PUBLISHED ON : பிப் 11, 2024

பாகவதரை பார்க்க ஆவல் கொண்ட மக்கள், ரயிலை மறித்து, அவரை கண்டு ரசித்தனர். ஆனால், 'நாங்கள், பாகவதரைப் பார்த்தது போதாது. அவரை, மீண்டும் பார்க்க வேண்டும்...' என்று, ஒரே கூச்சல்.
மீண்டும் பாகவதர் வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்து, கையசைத்தார். ஒரே ஆரவாரம். அடுத்த முறை பார்த்தும், வண்டியை நகர விடவில்லை, ரசிகர்கள்.
பிறகு, வெளியில் வந்து, 'இந்த வண்டியில், எத்தனையோ பேர் இருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அவசரம் இருக்குமல்லவா. என்னால், அவர்களுக்கு இடையூறு ஏற்படலாமா...
'என் மேல் நீங்கள் கொண்டிருக்கும் அன்பு உண்மையென்றால், உடனே, ரயில் கிளம்ப ஒத்துழைக்க வேண்டும். என் வேண்டுகோளை நிராகரிக்கக் கூடாது. தயவுசெய்து, தண்டவாளத்தை விட்டு நகருங்கள்...' என்று, நாலாபுறமும் பாகவதர் பார்த்து, கும்பிட்ட பிறகு தான், மக்கள் வெள்ளம் வழி விட்டது; ரயிலும் புறப்பட்டது.
கொச்சி எக்ஸ்பிரஸ் அன்று, ஐந்து மணி நேரம் தாமதம் என்பது, கூடுதல் தகவல்.
ஒருசமயம், உடுமலைப்பேட்டைக்கு வந்த, பாகவதர், அங்கே, பிரபலமான செல்வந்தர் ஒருவரது வீட்டிற்கு திடீரென்று விஜயம் செய்தார்.
பாகவதர் வந்த செய்தி, காட்டுத்தீ போல் பரவ, சிறிது நேரத்திலேயே, செல்வந்தர் வீட்டின் முன் பெருந்திரளாய் கூட்டம் கூடி விட்டது.
பாட்டு பாடுமாறு கேட்டார், செல்வந்தர்.
அங்கிருந்த மக்கள் ஒவ்வொருவரும், ஒரு பாட்டின் பெயரைச் சொல்லி, பாடக் கூறினர்.
'ரசிகர்களின் மகிழ்ச்சி தான், என் மகிழ்ச்சி...' என்று சொல்லி, அத்தனை பேரும் அகங்குளிருமாறு, கானமழை பொழிந்து தள்ளினார், பாகவதர். கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
கையில் வெள்ளித் தட்டு நிறைய பழங்கள், அவற்றின் மேல், கட்டாக ஆயிரம் ரூபாய் வைத்து, 'இதை ஏற்றுக் கொள்ள வேண்டும்...' என்றார், செல்வந்தர்.
அன்போடு பாகவதர் மறுக்க, அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர், சுற்றியிருந்தவர்கள்.
'அன்று நான், வறுமையின் பிடியில் வாடிய போது, என் தகப்பனாரோடு, உதவி கேட்டு உங்களிடம் வந்தோம். நான் பாடிக் காட்டவா, என் பாடலைக் கேட்கிறீர்களா என்று சிறுவனான நான் சொன்னேன். 'பாடு குழந்தை...' என்றீர்கள்.
'பாடினேன், மிகவும் சந்தோஷம் அடைந்த நீங்கள், உடனே, 10 ரூபாயை என்னிடம் கொடுத்து, என் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தீர்கள்.
'நீங்கள் அன்று கொடுத்த, 10 ரூபாயின் ஆசிர்வாத பலம் தான், இன்று நான் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க அஸ்திவாரம் இட்டது. என் நன்றியைக் காட்டவே இப்போது வந்தேன்...' என்று சிரித்தபடி சொல்லி, அங்கிருந்து புறப்பட்டார், பாகவதர்.
பாகவதரின் கீர்த்தி, நாளுக்கு நாள், வளர்பிறையாய் வளர்ந்தது. பட்டி தொட்டிகளில் எல்லாம் பாகவதர் பாடல் ஒலித்தது.
பாகவதர் படம் மாதக்கணக்கில் தியேட்டர்களில் ஓடி கொண்டிருந்தது. தியேட்டர்களில் படம் எத்தனை நாள் ஓடுகிறதோ, அதுவரை நாங்களும் பார்த்துக் கொண்டு தான் இருப்போம் என்று வெறித்தனமாய், சலிப்பே இன்றி பலமுறை பார்த்துக் கொண்டிருந்தனர், ரசிகர்கள்.
தருமபுரம் ஆதீனகர்த்தருக்கு, பாகவதரின் பாடல்களைக் கேட்க ஆர்வம். கர்நாடக சங்கீதம் மட்டுமின்றி, தேவார திருவாசகமும் பண்ணோடு பாடும் புலமை பெற்றவர், பாகவதர்.
பாகவதரின் குரலினிமையில் பரவசமான ஆதீனகர்த்தர், 'ஏழிசை மன்னர்' என்ற பட்டம் வழங்கி, அருளாசி நல்கினார்.
சுமார், 80 ஆண்டுகளுக்கு முன், கச்சேரி என்றால் தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தான் பாடல்கள் பாடுவர், வித்வான்கள். தமிழில் பாடினால் அகவுரவம் என்று கருதப்பட்ட காலம் அது.
அந்த காலத்தில், தமிழிசையைப் பரப்புவதற்காக சில மாமனிதர்கள் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டனர். அவர்களில், மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள், செட்டிநாட்டரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, மூதறிஞர் ராஜாஜியால், 'குற்றாலத் தவ முனிவர்' என்று போற்றப்பட்ட, ரசிகமணி டி.கே.சிதம்பரம், இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றோர்.
இன்னும் சில சங்கீத வித்வான்களைப் பற்றியும் சொல்ல வேண்டும்...
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், காயகசிகாமணி முத்தையா பாகவதர், முசிறி சுப்ரமண்ய ஐயர், டைகர் வரதாச்சார்யார், எம்.எம்.தண்டபாணி தேசிகர், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பழனி சுப்ரமண்ய பிள்ளை, கீவளூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளை, சித்துார் சுப்ரமண்யப் பிள்ளை, திருவாட்டி சரஸ்வதிபாய் போன்றவர்களையும் குறிப்பிட்டு சொல்லலாம்.
அத்தகையோர் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்களில், பாகவதரும் ஒருவர்.
பாகவதர், தமிழ் இசையைப் பரப்பினால், அது தமிழிசையையும், தமிழையும் வாழ வைக்கும். இப்படி சொல்லி, பாகவதரின் தமிழ் இசையை மேடைக் கச்சேரிகளில் பாட வைத்த பெருமை கல்கியையே சாரும்.
தமிழிசையைப் பரப்புவதற்காக, எத்தனையோ கச்சேரிகள் செய்துள்ளார், பாகவதர். அது மட்டுமல்ல, இலவசக் கச்சேரிகள் ஏராளமாய் நடத்திக் கொடுத்து, நன்கொடை திரட்டி, தமிழ் இசை வளர்ச்சிக்குப் பாடுபட்டுள்ளார்.
கடந்த, 1940ல், நலிந்து போன தமிழ் இசையைப் பிரபலப்படுத்தவே, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரால் துவக்கப்பட்டது, தமிழிசை சங்கம். தமிழில் மட்டுமே கச்சேரிகள் நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தது, தமிழிசை சங்கம்.
தமிழிசையைப் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, இப்பணியில் பாகவதர் இணைத்துக் கொண்ட பிறகு, மிகவும் பேரும் புகழும் பெறத் துவங்கியது. பிரபல பக்க வாத்தியாக்காரர்களும் பாகவதரோடு இணைந்து, தங்கள் பங்களிப்பையும் தர ஆரம்பித்தனர்.
இது பாகவதர் மூலம், தமிழிசைக்குக் கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.
சினிமாவில் எவ்வளவு, 'பிசி'யாக இருந்தாலும், தமிழிசைச் சங்கத்தில் பாடுவதற்கு, பாகவதர் மறுத்ததே இல்லை.
ஒருமுறை, கல்கி இப்படி எழுதியிருந்தார்:
'நான், அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் கச்சேரியைக் கடைசி வரை கேட்டேன். மனிதர், ஒரு தமிழ்ப்பாட்டுக் கூட, கச்சேரியில் பாடவில்லை. மிகவும் மன வருத்தம் கொண்டேன். அந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்வதற்காக, பாகவதரின், சிந்தாமணி படம் பார்த்து விட்டு வந்தேன்...' என்று குறிப்பிட்டிருந்தார்.
— தொடரும்
கார்முகிலோன்