PUBLISHED ON : ஜன 28, 2024

மலையாளிப் பெண்ணான, அமிர்தாஸ்ரீயும், அமெரிக்கா பெண்ணான, அபர்ணா மல்பறியும், சட்டப்படி தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர். அபர்ணாவின் பெற்றோர், உலகம் சுற்றும் பழக்கம் உடையவர்கள்.
இவர்கள், அமிர்தானந்த மயி ஆசிரமம் வந்தபோது, அபர்ணாவுக்கு, வயது மூன்று. அங்கேயே தங்கி, 15 வயது வரை படித்து, அமெரிக்கா திரும்பி, படிப்பை தொடர்ந்து, இதய நோய் மருத்துவர் ஆனார்.
ஆசிரியராக பணிபுரிந்த அமிர்தாஸ்ரீயை சந்தித்துள்ளார். அமெரிக்கா பெண் ஆனாலும், நன்கு மலையாளம் தெரிந்தவர், அபர்ணா. இருவரும் நெருங்கிய தோழிகள் ஆயினர். பல ஆண்டுகள் நட்பு, இவர்களை, மிகவும் நெருக்கமான நிலைக்கு கொண்டு சென்றது.
'இந்த உறவு பற்றி வெளியே சொல்ல பல காலம் தயங்கினோம். ஆனால், இப்போது எங்கள் உறவு பற்றி பகிரங்கமாக கூறி வருகிறோம்...' என்கின்றனர்.
— ஜோல்னாபையன்