PUBLISHED ON : ஜன 07, 2024

பெருமைக்குரிய செயல்களை
செய்திட தவறாதீர்கள்
மகிழ்ச்சிக்குரிய சாதனைகளை
சுவைத்திட தவறாதீர்கள்!
உலகத்துக்குரிய நன்மைகளை
முயன்றிட தவறாதீர்கள்
அழிவுக்குரிய தீமைகளை
மறந்திட தவறாதீர்கள்!
அன்புக்குரிய உறவுகளை
ஆதரித்திட தவறாதீர்கள்
வணக்கத்திற்குரிய புதுமைகளை
வரவேற்றிட தவறாதீர்கள்!
மரியாதைக்குரிய குணங்களை
புகழ்ந்திட தவறாதீர்கள்
உயிர்களுக்குரிய உதவிகளை
வழங்கிட தவறாதீர்கள்!
வாழ்வுக்குரிய அறிவுரைகளை
மதித்திட தவறாதீர்கள்
வழிபாடலுக்குரிய உள்ளங்களை
கவர்ந்திட தவறாதீர்கள்!
விருப்பத்துக்குரிய நண்பர்களை
அடைந்திட தவறாதீர்கள்
வெறுப்புக்குரிய போலிகளை
விரட்டிட தவறாதீர்கள்!
சிறப்புக்குரிய கொள்கைகளை
போற்றிட தவறாதீர்கள்
சிந்தனைக்குரிய எண்ணங்களை
கொடுத்திட தவறாதீர்கள்!
வெற்றிக்குரிய வழிமுறைகளை
கற்றிட தவறாதீர்கள்
புகழுக்குரிய காரணங்களை
தக்கவைத்திட தவறாதீர்கள்!
— பொ.தினேஷ்குமார், காஞ்சிபுரம்.
செய்திட தவறாதீர்கள்
மகிழ்ச்சிக்குரிய சாதனைகளை
சுவைத்திட தவறாதீர்கள்!
உலகத்துக்குரிய நன்மைகளை
முயன்றிட தவறாதீர்கள்
அழிவுக்குரிய தீமைகளை
மறந்திட தவறாதீர்கள்!
அன்புக்குரிய உறவுகளை
ஆதரித்திட தவறாதீர்கள்
வணக்கத்திற்குரிய புதுமைகளை
வரவேற்றிட தவறாதீர்கள்!
மரியாதைக்குரிய குணங்களை
புகழ்ந்திட தவறாதீர்கள்
உயிர்களுக்குரிய உதவிகளை
வழங்கிட தவறாதீர்கள்!
வாழ்வுக்குரிய அறிவுரைகளை
மதித்திட தவறாதீர்கள்
வழிபாடலுக்குரிய உள்ளங்களை
கவர்ந்திட தவறாதீர்கள்!
விருப்பத்துக்குரிய நண்பர்களை
அடைந்திட தவறாதீர்கள்
வெறுப்புக்குரிய போலிகளை
விரட்டிட தவறாதீர்கள்!
சிறப்புக்குரிய கொள்கைகளை
போற்றிட தவறாதீர்கள்
சிந்தனைக்குரிய எண்ணங்களை
கொடுத்திட தவறாதீர்கள்!
வெற்றிக்குரிய வழிமுறைகளை
கற்றிட தவறாதீர்கள்
புகழுக்குரிய காரணங்களை
தக்கவைத்திட தவறாதீர்கள்!
— பொ.தினேஷ்குமார், காஞ்சிபுரம்.