PUBLISHED ON : டிச 31, 2023

சிறுநீரகம் தானம் கொடுப்பதால், தங்கள் உடல் நலம் பாதிக்கப்படுமோ என்ற பயம் இன்றும் பலருக்கு இருக்கிறது. ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன், தன், 60வது வயதில், மகனுக்கு சிறுநீரகம் அளித்தார், ஒரு தாய். இன்று தன், 100 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த, மேரி கிரேஸ் ஆண்டனி என்ற அந்த பெண்மணி.
சிறுநீரகம் அளிப்பது பற்றி அவ்வளவு புரிதல் இல்லாத அந்த காலத்தில், துணிச்சலோடு முடிவு எடுத்த, மேரியை, பயமுறுத்தினர் உறவினர்கள். இருப்பினும். பயப்படாமல், மகனுக்கு சிறுநீரகம் கொடுத்தார். இன்றும், மேரியும், அவரது மகனும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
— ஜோல்னாபையன்