Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - புத்தாண்டு சபதம்!

கவிதைச்சோலை - புத்தாண்டு சபதம்!

கவிதைச்சோலை - புத்தாண்டு சபதம்!

கவிதைச்சோலை - புத்தாண்டு சபதம்!

PUBLISHED ON : டிச 31, 2023


Google News
Latest Tamil News
புது ஆண்டு பிறக்கும்போதெல்லாம்

புத்தாண்டு சபதம் எடுப்பது

வெறும் சம்பிரதாயமாகி போனது!

எத்தனை ஆண்டுகள்

எத்தனை சபதங்கள்

சாதித்தது என்ன?

பிறக்கும் ஆண்டிலாவது

புதிய கனவுகளை, ஆசைகளை

நித்தம் நித்தம் புதுப்பித்து

உயரிய இலக்குகளை அடையலாம்!

சுயநலமும், சுரண்டல்களையுமே

கொள்கையாக்கி கொள்ளையடிக்கும்

அரசியல்வாதிகளின் வாய் ஜாலங்களில்

சிக்கி திசை மாறி இனியும்

நுாலறுந்த பட்டம் போலாகலாமா?

இலவசம் பெறாமல் ஓட்டு போட

தப்பு கண்டால் தட்டிக்கேட்க

நெருப்பு பறவையாய் புறப்பட

இன்றாவது உறுதியெடு தோழா!

இன்றைய வெற்றி நாளைய சரித்திரம்

உன் சரித்திரத்தை நீயே எழுது

நீதான் இச்சமூகத்தைத் தாங்கும் துாண்!

யாருடைய மாதிரியாகவும் நீ இருக்காதேதனித்தன்மையுடன் இருப்பவர்களே

நிலைத்து நிற்கின்றனர்!

நாள்காட்டி தாள்களை கிழிக்கையில்

நேற்று என்ன சாதித்துக் கிழித்தேன்

என்று யோசி நண்பா!

உதாசீனத்தால் நிராகரிக்கப்படுகிறீர்களா...

நிமிர்ந்து நில்லுங்கள்

மேலே எறிந்த பந்து பூமிக்கு வந்தே தீரும்

செய்யப்பட்ட முயற்சி பலனை

அடைந்தே தீரும்!

நவீன தொழில்நுட்பங்களின்

இருட்டு பக்கங்களில்

காணாமல் போகாமல்

அதன் வெளிச்சத்தில்

சந்திரயான்களாக வானத்தை ஆளுவோம்!

வாழப் பிறந்தவர்கள் நாம்

நம் திசைகளை, பாதைகளைத் தேடி

தொடர்ந்து போய்க்கொண்டே இருப்போம்!

எத்தனை துார பயணமானாலும்

முதல் அடி எடுத்து

வைப்பதில் தான் ஆரம்பமாகிறது!

புகுந்தது நம் வாழ்வில்இன்னோர் புதியதோர் ஆண்டு

நாடும், வீடும் மேன்மை அடைய

உறுதி எடுப்போம் வாருங்கள்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

செல்வி நடேசன், சென்னை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us