PUBLISHED ON : ஜூலை 21, 2024

பக்தியோட எல்லை எதுன்னு தெரியணுமா?
கிருஷ்ணர் மேல் அதிக பக்தி கொண்டவன், மயூரசர்மன்.
ஒருநாள், அவனைப் பார்க்க கிருஷ்ணர் வர, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்.
'நான் ஒண்ணு கேட்பேன். கொடுப்பாயா?' என்றார், கிருஷ்ணர்.
'நீங்க என்ன கேட்டாலும், அதை கொடுக்க நான் சித்தமாய் இருக்கிறேன்...' என்றான், மயூரசர்மன்.
'உன்னுடைய, 5 வயது மகன் எனக்கு வேணும்...' என்றார், கிருஷ்ணர்.
கொஞ்சம் கூட தயங்காமல், தருவதாக கூறினான், மயூரசர்மன்.
'அவன் உடம்பு பூராவும் எனக்கு தேவையில்லை. அவன் உடம்பின் வலது பாகம் மட்டும் போதும்...' என கேட்கவும், அதற்கும், ஒப்புக் கொண்டான்.
'அந்த சிறுவனை நிற்க வைத்து, அவன் தலையில் இருந்து, ரம்பத்தால் அறுக்கணும்...' என்றார்.
'சரி அப்படியே செய்யலாம்...' என்றான்.
'அந்த ரம்பத்தை, நீ ஒரு பக்கமும், உன் மனைவி ஒரு பக்கமும் பிடித்து அறுத்து, அவனை ரெண்டு துண்டாக்கணும்...' என்றார்.
'சரி...' என்றான்.
'உன் மகனும் அழக்கூடாது...' எனக் கூற, அதற்கும் ஒப்புக்கொண்டான்.
இவ்வளவு நிபந்தனைகளுக்கு உட்பட்டால் தான் மகனை ஏற்பதாக, கிருஷ்ணர் கூற, உங்களின் அத்தனை நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பதாக கூறினான், மயூரசர்மன்.
உடனே, மகனை அழைத்து, அவனைக் குளிப்பாட்டி, புது ஆடைகள் அணிவித்தான். அதன்பின், ரம்பத்தை எடுத்து, அறுக்க ஆரம்பித்தனர், அவனும், அவனது மனைவியும். இருவர் கண்களிலும் இருந்து கண்ணீர் வரவில்லை. ஆனால், சிறுவனின் இடது கண்ணிலிருந்து மட்டும் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
இதை பார்த்து, 'என் நிபந்தனைபடி நீங்கள் நடக்கலை. அதனால், உங்கள் மகனின் வலது பாகம் எனக்கு வேண்டாம்...' என சொல்லி விட்டார், கிருஷ்ணர்.
'நாங்கள் இருவரும் அழலையே...' என்றான், மயூரசர்மன்.
'நீங்கள் அழவில்லை. ஆனால், உங்களது மகனின் இடது கண் மட்டும் அழுகிறதே...' என்றார்.
'என் உடம்பின் வலது பாகத்தை மட்டும் தானே, பகவான் கேட்டார். வலது பாகம் செய்த புண்ணியத்தை, இடது பாகம் செய்யவில்லையே என நினைத்து தான், இடது கண் அழுகிறது...' என்றான், மகன்.
உடனே, கிருஷ்ணர் கண்களில் கண்ணீர் வர, அவனை கட்டியணைக்க, பழைய மாதிரி ஆனான்.
'இப்படியெல்லாம் பையனை வெட்டிக் கொடுன்னு பகவான் கேட்பாரா?' என, கேட்கக் கூடாது. பக்தியின் பெருமையை எடுத்து சொல்ல, இப்படி கதைகள் கூறுவது வழக்கம் தான்.
ஆன்மிக விஷயங்களை, அதன் நோக்கத்துலேயே புரிந்து கொள்ள வேண்டும்; அதுதான் முக்கியம்.
பக்தியின் எல்லைக்கு நம்மால் போக முடியாவிட்டாலும், ஒரு ஓரத்துக்காவது
போய் சேர முடிகிறதா என, முயற்சித்து பார்க்கலாம்!
பி. என். பி.,