PUBLISHED ON : மே 03, 2026

மேடு பள்ளம்
இரண்டிற்கும் இடையில்
இழந்த துாரம்
உழைப்பு!
சண்டைக்கும்
ஆதரவுக்கும்
இரண்டிற்கும் இடையில்
இழந்த துாரம்
சமாதானம்!
அலங்காரத்திற்கும்
எளிமைக்கும்
இரண்டிற்கும் இடையில்
இழந்த துாரம்
பக்குவ மனம்!
வறுமைக்கும்
செல்வ செழிப்புக்கும்
இரண்டிற்கும் இடையில்
இழந்த துாரம்
பரந்த குணம்!
நேர்மைக்கும்
துரோகத்திற்கும்
இரண்டிற்கும் இடையில்
இழந்த துாரம்
மன மாற்றம்!
வீரத்திற்கும் கோழைக்கும்
இரண்டிற்கும் இடையில்
இழந்த துாரம்
போராடும் முயற்சி!
தீய நடவடிக்கைக்கும்
நல்ல நடவடிக்கைக்கும்
இரண்டிற்கும் இடையில்
இழந்த துாரம்
மகத்தான கல்வி!
மனிதருக்கும்
புனிதருக்கும்
இரண்டிற்கும் இடையில்
இழந்த துாரம்
ஆழ்ந்த பக்தி!
விருப்புக்கும்
வெறுப்புக்கும்
இரண்டிற்கும் இடையில்
இழந்த துாரம்
அப்பழுக்கற்ற அன்பு!
அர்த்தமுள்ள கேள்விக்கும்
வாக்குவாதத்திற்கும்
இரண்டிற்கும் இடையில்
இழந்த துாரம்
வீம்பு தற்பெருமை!
- ஆர்.சீதாராமன், சீர்காழி. தொடர்புக்கு: 98423 71679.
