PUBLISHED ON : ஜூன் 08, 2025

புகழுக்குரிய காரியங்களை
தொடர்ச்சியாக செய்யப் பழகு
கிடைத்த வாழ்க்கைக்கும்
வாழும் நாட்களுக்கும்
அதுவே ஈடு இணையற்ற அழகு!
வெற்றிக்குரிய முயற்சிகளை
தொடர்ச்சியாக செய்யப் பழகு
கடினமான உழைப்புக்கும்
எண்ணிய லட்சியத்திற்கும்
அதுவே ஈடு இணையற்ற அழகு!
பெருமைக்குரிய பயிற்சிகளை
தொடர்ச்சியாக செய்யப் பழகு
மனதின் பொறுமைக்கும்
மாண்பு தரும் அமைதிக்கும்
அதுவே ஈடு இணையற்ற அழகு!
பாராட்டுக்குரிய உதவிகளை
தொடர்ச்சியாக செய்யப் பழகு
ஈட்டிய வருமானத்திற்கும்
சேர்த்திட்ட சொத்துகளுக்கும்
அதுவே ஈடு இணையற்ற அழகு!
மரியாதைக்குரிய நடத்தைகளை
தொடர்ச்சியாக செய்யப் பழகு
ஆற்றிடும் கடமைக்கும்
நம்பிடும் ஒழுக்கத்திற்கும்
அதுவே ஈடு இணையற்ற அழகு!
நேர்மைக்குரிய தொழில்களை
தொடர்ச்சியாக செய்யப் பழகு
நிறைந்திடும் பலன்களுக்கும்
அடைந்திடும் மகிழ்விற்கும்
அதுவே ஈடு இணையற்ற அழகு!
ஞானத்திற்குரிய தேடல்களை
தொடர்ச்சியாக செய்யப் பழகு
அறிவின் ஆழமான பயணத்திற்கும்
தெரிய வரும் உண்மைகளுக்கும்
அதுவே ஈடு இணையற்ற அழகு!
— பொ.தினேஷ்குமார், காஞ்சிபுரம்.
தொடர்ச்சியாக செய்யப் பழகு
கிடைத்த வாழ்க்கைக்கும்
வாழும் நாட்களுக்கும்
அதுவே ஈடு இணையற்ற அழகு!
வெற்றிக்குரிய முயற்சிகளை
தொடர்ச்சியாக செய்யப் பழகு
கடினமான உழைப்புக்கும்
எண்ணிய லட்சியத்திற்கும்
அதுவே ஈடு இணையற்ற அழகு!
பெருமைக்குரிய பயிற்சிகளை
தொடர்ச்சியாக செய்யப் பழகு
மனதின் பொறுமைக்கும்
மாண்பு தரும் அமைதிக்கும்
அதுவே ஈடு இணையற்ற அழகு!
பாராட்டுக்குரிய உதவிகளை
தொடர்ச்சியாக செய்யப் பழகு
ஈட்டிய வருமானத்திற்கும்
சேர்த்திட்ட சொத்துகளுக்கும்
அதுவே ஈடு இணையற்ற அழகு!
மரியாதைக்குரிய நடத்தைகளை
தொடர்ச்சியாக செய்யப் பழகு
ஆற்றிடும் கடமைக்கும்
நம்பிடும் ஒழுக்கத்திற்கும்
அதுவே ஈடு இணையற்ற அழகு!
நேர்மைக்குரிய தொழில்களை
தொடர்ச்சியாக செய்யப் பழகு
நிறைந்திடும் பலன்களுக்கும்
அடைந்திடும் மகிழ்விற்கும்
அதுவே ஈடு இணையற்ற அழகு!
ஞானத்திற்குரிய தேடல்களை
தொடர்ச்சியாக செய்யப் பழகு
அறிவின் ஆழமான பயணத்திற்கும்
தெரிய வரும் உண்மைகளுக்கும்
அதுவே ஈடு இணையற்ற அழகு!
— பொ.தினேஷ்குமார், காஞ்சிபுரம்.