Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - நம்பி விடாதீர்கள்!

கவிதைச்சோலை - நம்பி விடாதீர்கள்!

கவிதைச்சோலை - நம்பி விடாதீர்கள்!

கவிதைச்சோலை - நம்பி விடாதீர்கள்!

PUBLISHED ON : ஜூலை 14, 2024


Google News
Latest Tamil News
உரக்கச் சொல்லப்படுவதெல்லாம்

உண்மையென நம்பி விடாதீர்கள்...

ஏமாறும் காதுகளைத் தேடி

பெருத்த சத்தத்தோடு தான்

பொய்கள் வரும்!

புன்னகைக்கும் உதடுகளிலெல்லாம்

நேசமிருக்குமென நம்பி விடாதீர்கள்...

அழகாக படமெடுத்தாடும்

நாகத்தின் கூர்மையான பற்களில்

நிச்சயம் விஷமிருக்கும்!

வளைந்து பணிவோரெல்லாம்

விசுவாசமானவரென நம்பி விடாதீர்கள்...

வாய்ப்பு கிடைக்கும்போது

காலை வாரி விடும்போது தான்

சுயரூபம் புரிந்திடும்!

தரப்படும் வாக்குறுதியெல்லாம்

நிறைவேற்றப்படுமென நம்பி விடாதீர்கள்...

தேவைகள் தீர்ந்த பின்

வெளிப்படும் துரோகத்தில் தான்

சுயநலம் தெரிந்திடும்!

போதனைகள் செய்வோரெல்லாம்

கடவுளென நம்பி விடாதீர்கள்...

பசுத்தோல் போர்த்திய புலிகளும்

வஞ்சக எண்ணங்களோடு இங்கே

உறுதியாக உலவிடும்!

வெளிச்சத்தில் தென்படுவதெல்லாம்அசல்தானென நம்பி விடாதீர்கள்...

கானல் நீரின் முகத்திரை

நெருங்கிக் காணும்போது தான்

மொத்தமாக கிழிபடும்!

ஆதரவு காட்டுவோரெல்லாம்

ஆபத்பாந்தவனென நம்பி விடாதீர்கள்...

சாத்தான்களும், தேவதைகளாய்

வேடமிட்டதை உணரும்போது தான்

நிதர்சனம் புலப்படும்!

— ஆர்.செந்தில்குமார், மதுரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us