Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கார்த்திகை தீபம்!

கார்த்திகை தீபம்!

கார்த்திகை தீபம்!


PUBLISHED ON : டிச 08, 2024

Follow on Google

PUBLISHED ON : டிச 08, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ் மாதங்களில் ஒன்றான கார்த்திகையில் பவுர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நன்னாள், கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.

* கார்த்திகை திருநாள் என்றதும் நம் நினைவிற்கு வருவது, தீப விளக்குகளும், திருவண்ணாமலை தீபமும் தான். முக்தி தரும் தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருநாளன்று, திருவண்ணாமலை அடிவாரத்தில் பரணி தீபமும், மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்

* திருவண்ணாமலையில் மலை உச்சியில், மாலை 6.00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். அதன் பிறகு 6.05 மணிக்கு மேல், வீடுகளில் திருவிளக்குகளை ஏற்றி அலங்கரிக்கலாம்

* புதிதாக சில விளக்குகளை வாங்கி, அதனோடு பழைய விளக்குகளையும் சேர்த்து விளக்கு ஏற்றுவது நல்லது. அகல் விளக்குகளை தண்ணீரில் நனைத்து காயவைத்து, மஞ்சள் மற்றும் குங்குமம் பூசி தயார் செய்து கொள்ள வேண்டும்

* கார்த்திகை தீபத்திருநாளன்று, அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு, நல்லெண்ணெய் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். ஒரேயொரு நெய் விளக்காவது ஏற்றுவது சிறப்பானது

* வீடுகளில், 27 அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். வீட்டு வாசலில் கோலத்தின் மீது தாம்பூலம் அல்லது மனை பலகை வைத்து, ஐந்து முக குத்துவிளக்கு ஏற்றி வழிபடுவது சிறந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap