Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஒரு துணியை தண்ணீரில் நனைத்து, நன்றாகப் பிழிந்து, சிலிண்டரை மேலிருந்து கீழ் நோக்கி ஒரு முறை துடைக்கவும். அது உலரும் வரை காத்திருக்கவும். இப்போது துடைத்த இடத்தில், கேஸ் இல்லாத பகுதி வேகமாக உலரும். கேஸ் இருக்கும் பகுதி சற்று ஈரப்பதத்துடன் அப்படியே இருக்கும். எதுவரை கேஸ் இருக்கிறது என, என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்

* சிலருக்கு பாதங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு, விகாரமாக இருக்கும்; நடந்தால் வலிக்கும். இதை, பித்த வெடிப்பு என, கவனிக்காமல் விட்டு விடுவர், சிலர். பாத வெடிப்புள்ளவர்கள் வெது வெதுப்பான வெந்நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருக்கவும். அதன் பின் பாதங்களை நன்கு துடைத்து, ஒரு தேக்கரண்டி கிளிசரின், ஒரு தேக்கரண்டி பன்னீர், இரண்டு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு கலந்த கலவையை வெடிப்புகள் மீது பூசி வர, வெடிப்புகள் காணாமல் போகும்

* மாதுளம் பழங்களை எளிமையாக உரிக்க, மாதுளையின் மேல் பகுதியை முதலில் இளநீர் சீவுவது போல் வெட்டி எடுத்து விடுங்கள். பிறகு, வெள்ளை பகுதிகள் உள்ள இடத்தை கீறி, பழத்தை விரித்தால், மாதுளை முத்துக்களை எளிதில் எடுக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us