Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வீ.குமாரி, சென்னை: டில்லியில் நடைபெற்ற, செயற்கை நுண்ணறிவு மாநாட்டு அரங்கிற்குள், இளைஞர் காங்., நிர்வாகிகள், மேலாடை இன்றி போராட்டம் நடத்தியது சரியா?

நாட்டிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கட்சி, ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனால், சீரழிந்து சின்னாபின்னமாகி விட்டது. கண்ணியத்தை முற்றிலும் இழந்து விட்ட அக்கட்சியை, காந்திஜி அன்றே சொன்னது போல், கலைத்து விடுவது தான் நல்லது!

என்.ஜெயம், கடலுார்: தன்னையே தலைவராக அங்கீகரித்து, மாம்பழச் சின்னத்தை முடக்கக் கேட்டு, 'பெட்டிஷன்' போட்ட பா.ம.க., ராமதாசை, சென்னை உயர் நீதிமன்றம், 'லெப்ட் அண்டு ரைட்' விட்டுள்ளதே!

வேறென்ன செய்வது... ராமதாசுக்கே தெரியும், தன், 'பெட்டிஷன்' தள்ளுபடி ஆகும் என்று! கேஸ் நடத்துவதற்காக செலவிடும் காசை, கைவசம் இருக்கும் மிச்ச சொச்ச தொண்டர்களுக்குப் பகிர்ந்தளித்து விட்டு, 'ஈசி' சேரில், 'அக்கடா'வென உட்காருவது தான் இனி அவருக்கு நல்லது!

ஜி.வெங்கட்ராமன், புதுச்சேரி: 'லஞ்சம், ஊழல் மலிந்த தி.மு.க.,வை அகற்ற வேண்டும்...' என, கேப்டன் விஜயகாந்த் ஆரம்பித்த கட்சி தான், தே.மு.தி.க., இன்று, தி.மு.க., கூட்டணியில், பிரேமலதா இணைந்து செயல்படுவது, மக்கள் மத்தியில் எடுபடுமா?

தன் வாரிசுகளின் வளர்ச்சிக்காக, விஜயகாந்தின் கொள்கைகளையும், கட்சியையும், தி.மு.க.,விற்கு அடமானம் வைத்து விட்டார், பிரேமலதா. கம்யூ., - காங்., கட்சிகளைப் போல், காலத்துக்கும் இனி, தி.மு.க.,வுக்கு அடிமையாகக் கிடக்க வேண்டியது தான்; ஓட்டு ஒன்றும் தேறாது!

* கி.அப்புக்குட்டி, பாலக்காடு: 'படித்த ஐ.எப்.எஸ்., அதிகாரிகளை மேய்ப்பதே பெரிய சிக்கலா இருக்கு...' என்கிறாரே வனத்துறை அமைச்சர்,ராஜ கண்ணப்பன்...

இவர் உதிர்க்கும், 'புனித' வார்த்தைகள், எப்போதுமே மற்றவர் காதில், 'தேன் பாயும்' வகை தான். இதே வசனத்தை, அந்த ஐ.எப்.எஸ்., அதிகாரிகள், இவர் மீது பிரயோகித்தால் இவர், வன விலங்கு ஆகி விடுவார் போல இருக்கிறதே!

ப.காளிதாசன், புதுக்கோட்டை: மாசுபடாத காற்று கிடைக்கும் இந்திய நகரங்களின் பட்டியலில், திருநெல்வேலி முதலிடம் பிடித்திருப்பது பற்றி...

கடலோர சூழலும், பசுமையான சூழ்நிலையுமே இதற்கு காரணம். பலத்த கடல் காற்று, திருநெல்வேலியை சொர்க்கமாக இருக்க வைக்கிறது. சவுதி அரேபிய அரசு, 'சவுதி பசுமை முன்முயற்சி' என்ற இயக்கத்தை ஏற்படுத்தி, அதன் வாயிலாக, இரண்டு ஆண்டுகளில், 15 கோடி மரங்களை, தன் பாலைவன பகுதிகளில் வளர்த்துள்ளது. மரங்களை வளர்க்க, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரையே பயன்படுத்துகிறது; அனைத்து மரங்களும், வறட்சியையும் தாங்கி வளரும் வகையை சேர்ந்தது. நம் நாட்டிலும் இப்படி ஒரு இயக்கத்தை உருவாக்குவது நல்லது!

எம்.ராஜேந்திரன், லால்குடி: உயர் கல்வியில் தமிழ்நாடு முன்னேறியதற்கு காரணம் முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., தான் என்று சொல்லப்படுகிறதே...

உண்மைதான்! தனியார் தொழில்நுட்பக் கல்லுாரிகளும், மருத்துவக் கல்லுாரிகளும் தமிழ்நாட்டில் துவங்கப்பட்டதற்கு காரணம், எம்.ஜி.ஆர்., தான். அப்படி துவங்குவதற்காக, சில பேருக்கு நிதி உதவியும் செய்திருக்கிறார்!

மு.நாகூர், ராமநாதபுரம்: உ.பி.,யில், முறைகேடு காரணமாக, 178 தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில துணை முதல்வர், பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளாரே...

நேர்மையற்ற முறையில் செயல்படும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது, நடவடிக்கை எடுத்து வருகிறார், பா.ஜ.,வைச் சேர்ந்த உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத். நல்ல விஷயம் தானே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us