Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

PUBLISHED ON : மார் 30, 2025


Google News
Latest Tamil News
தேன் ராஜா, நெய்வேலி: உங்களுக்கு அடுத்த பதவி உயர்வு எப்போது?

நிர்வாகத்தினர், ஏற்கனவே பதவி உயர்வு கொடுத்து விட்டனர். விலை உயர்ந்த மூன்று கார்கள் வாங்கிக் கொடுத்துள்ளனர்; அவற்றை, நானே ஓட்டுகிறேன்!

ப.கவுரி, திருச்சி: வெளியூர் பயணங்களின் போது, புத்தகம் படிப்பீர்களா அல்லது இசை கேட்பீர்களா, அந்துமணி?

பெரும்பாலும், கார் பயணம் தான்! நானே தான் ஓட்டுவேன். வாக்கியத்துக்கு ஏற்ப, ஏற்ற இறக்கத்துடன் படிக்கத் தெரிந்த ஒருவரை அருகில் அமர்த்திக் கொள்வேன். அவர் படிப்பதையும் கேட்டபடி, மெல்லிய இசையை ஓட விட்டு அதையும் ரசித்தபடி செல்வது, தனி அலாதி!

இரவில் இசையைக் கேட்டபடி துாங்குவேன்!

* எம்.பி.தினேஷ், இடையர்பாளையம், கோவை: 'தொகுதி மறுவரையறை மூலம், தமிழ்நாட்டுக்கு கூடுதல் தொகுதிகள் அமையும்...' என, மத்திய அமைச்சர்கள் கூறிய பின்னும், தமிழக ஆளுங்கட்சியினர் மடைமாற்றம் செய்து பேசுவது சரியா...

ஓட்டை அள்ள நடத்தப்படும் மிகப்பெரிய நாடகம் இது.

தொகுதி மறுவரையறை செய்ய, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் பின், இந்த நடைமுறையை முடிக்க, சில ஆண்டுகள் ஆகும்.

ஆனால், இந்த அனைத்திற்குமே, பார்லி., ஒப்புதல் தேவை. இதெல்லாம் மக்களுக்குப் புரியாது என்பதால், ஓட்டு அறுவடைக்கு இதை பயன்படுத்திக் கொள்கின்றனர்!

ஆர்.ஹரிகோபி, டில்லி: எந்தக் கட்சியையும் சாராத, சுயேச்சையாக வெற்றி பெற்ற ஒருவரை, சபாநாயகராக தேர்ந்தெடுத்தால், அவர் நடுநிலையாக செயல்படுவார் அல்லவா!

நல்ல யோசனை தான்; ஆனால், அந்த வெற்றியாளர், சபையை திறம்பட நடத்த, அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டுமே!

ஆர்.சூர்யா, திருவிடை மருதுார், தஞ்சாவூர் மாவட்டம்: ஒவ்வொரு ஆண்டும், சென்னை, அடையாறு கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்த, 1,500 கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறதே...

ஆற்றின் பக்கவாட்டிலிருந்து வரும் கழிவுகளை அடைத்து விட்டால், கூவம், லண்டனின் தேம்ஸ் நதி போல் ஆகும். ஆனால், அரசியல்வாதிகள், 'காசு பதுக்கும்' ஆசையில், இதைச் செய்யாமல் விட்டு விடுகின்றனர்.

இந்தாண்டு பாலங்களின் அடியில் செடி வளர்க்க, 65 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். அனைத்தும் பாழ்!

பி.பாலாஜி கணேஷ், சிதம்பரம்: உண்மையிலேயே நிதிநிலை அறிக்கையை தயார் செய்வது யார்? அதிகாரியா, அரசியல்வாதியா?

அதிகாரிகள் தான்; அரசியல்வாதிகளுக்கு ஒன்றும் தெரியாது!

* நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி: 'சட்டம் பயின்று வருபவர்கள், பத்தில் ஏழு பேருக்கு தகுதி இல்லை...' என, நீதிபதி சுந்தரேஷ் கூறியிருக்கிறாரே...

நீதிபதியே சொல்கிறார் என்றால், அது உண்மையாகத் தானே இருக்கும்!

சட்டம் பயில்பவர்கள், இவர் கருத்தை மனதில் வாங்கிச் செயல்பட்டால், அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us