Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

PUBLISHED ON : பிப் 23, 2025


Google News
Latest Tamil News
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி: 'சேலத்தை சீர் செய்தார்; நெல்லையை நேர் செய்தார்...' என, அமைச்சர் நேருவுக்கு, முதல்வர் ஸ்டாலின், பாராட்டு பத்திரம் வாசித்து இருக்கிறாரே...

எதுகை மோனையுடன் பேச, முதல்வர் ஸ்டாலினுக்கு, யாரோ எழுதிக் கொடுக்கின்றனர்!

ப.சோமசுந்தரம், சென்னை: தமாஷ்கள், ஆறிலிருந்து நான்கு, மூன்றாக குறைந்து விட்டதே... தயவு செய்து காரணம் கூறுங்களேன்...

'குபீர் சிரிப்பை வரவழைக்கும் தமாஷ்கள், இப்போது குறைந்து விட்டன. அதனால், தேர்வாகும் தமாஷ்களை வெவ்வேறு பக்கத்தில் வெளியிடுகிறோம்...' என, பொறுப்பாசிரியர் கூறுகிறார்.

வி.மாயகிருஷ்ணன், புதுக்கோட்டை: 'தினமலர்' நாளிதழைத் தவிர, பிற பத்திரிகைகளைப் படிக்க, உங்களுக்கு நேரம் இருக்கிறதா...

காலையில் அனைத்து பத்திரிகைகளையும், மாலையில், வெளியாகும் பத்திரிகைகளையும் படித்து விடுவேன்!

* எஸ்.ராஜம், திருச்சி: நீண்ட கடிதங்கள் எழுதிய காலம் போய், குறுஞ்செய்தி அனுப்பும் காலம் வந்து விட்டதே...

தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்து, நாமும் வளர்வது நல்லது தானே!

க.கல்பனா, சென்னை: தலைநகர் டில்லியில், 27 ஆண்டுகளுக்குப் பின், பா.ஜ., ஆட்சி அமைகிறது. 2026ல், தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதா...

வாய்ப்பில்லை; பா.ஜ.,வுக்கு ஓட்டு சதவீதம் மட்டும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு!

* எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்: தி.மு.க.,வில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே, நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, 'நான், கோவை மேயராகவோ, சென்னை மேயராகவோ வருவதற்கான வாய்ப்பு உள்ளது...' என, சொல்லி இருக்கிறாரே...

அப்படி எல்லாம் நடந்தால், பெரிய காமெடி தான்!

எல்.மூர்த்தி, கோவை: இருக்கும் மதுக்கடைகளை குறைக்க, நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளதே...

அறிவுரை தானே... நடைமுறைக்கு வருகிறதா என பார்ப்போம்!

எம்.கல்லுாரி ராமன், கரிசல்புலி, ராமநாதபுரம்: நெல்லையில் முதல்வர் ஸ்டாலின், ஒரு குழந்தைக்கு, செந்'தாமரை' என பெயர் சூட்டியுள்ளாரே...

அது, அவரது மகளின் பெயர்!

புவனா நாகராஜன், சிதம்பரம்: என் கேள்விக்கு பதில் வராத நிலையில், அந்துமணியின் அலுவலகம் முன்பாக, உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். தங்களுக்கு சம்மதமா?

இதோ, உங்களுக்கு பதில் வந்து விட்டது... வீட்டில் அமர்ந்து, நிம்மதியாக சாப்பிடுங்கள்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us