PUBLISHED ON : பிப் 16, 2025

பூவை சுபாவாணன், கோவை: அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ள இந்தியர்களை திருப்பி அனுப்பும், அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கை பற்றி, தங்கள் கருத்து என்ன?
சட்ட விரோதமான செயல்களை, எங்கும், எப்போதும் செய்யக் கூடாது; செய்தால், மதிப்பு, கவுரவம், அந்தஸ்து பறிபோகும்.
* எம்.கல்லுாரி ராமன், கரிசல்புலி, ராமநாதபுரம்: 'சட்டம் - ஒழுங்கில் கவனம் செலுத்துங்கள்...' என, கலெக்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கூறுவதைப் பார்த்தால், சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று தானே அர்த்தமாகிறது...
அவருக்கே தோன்றி விட்டது போலிருக்கிறது!
* எஸ்.பீ.பரணீதரன், தேனி: மத்திய அரசு பட்ஜெட் மீது, தமிழக அரசு எப்போதும் குறை கூறுவதற்கு என்ன காரணம்?
பட்ஜெட்டில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதை சரியான முறையில் எடுத்துச் சொல்ல, அதிகாரிகளுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது!
எஸ்.மைதிலி, அச்சிறுப்பாக்கம், சென்னை: வீட்டில் இருந்தவரை, வாழ்க்கை சராசரியாக இருந்தது; வேலைக்குச் சென்ற பின், வாழ்க்கை, தினம் ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறதே...
நல்ல வாய்ப்பு; மிகச் சரியாக பயன்படுத்தினால், வாழ்க்கை இனிமையாகும்!
செ.சவுமியா, அரூர், தர்மபுரி: தற்போது, பெட்ரோல் பங்க், பஞ்சர் கடைகள், வெல்டிங் ஒர்க்ஸ் என, அனைத்திலும், பெண்கள் வந்து விட்டனரே...
இந்த வேலைகளை பெண்களால் செய்ய முடியாது என்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. 'பைனான்ஷியல் இன்டிபெண்டன்ஸ்' கொண்டுள்ள பெண்கள், குடும்பத்தையே முன்னேற்றி விடுவர்!
மல்லிகை மன்னன், மதுரை: 'ஆண்டு வருமானம், 12 லட்சம் ரூபாய் உள்ளவர்கள், இனிமேல் வருமான வரி செலுத்த வேண்டாம்...' என, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது, பாராட்ட வேண்டிய அம்சம் தானே...
நல்ல விஷயம் தான்; மக்கள் கையில் பணம் புரண்டால், பொருட்கள் வாங்குவர்; தேவை அதிகரித்து, வேலைவாய்ப்புகள் உருவாகி, பொருளாதாரம் மேம்படும். ஆனால், இத்தனை ஆண்டுகளாக, இது ஏன் தோன்றவில்லை என தெரியவில்லை!
பி.மோகன்ராஜு, காஞ்சிபுரம்: 'பத்திரிகையாளர்களை துன்புறுத்த வேண்டாம்...' என, உயர்நீதிமன்றம் கூறியுள்ளதே...
எந்த செய்தியையும் ஆதாரம் இன்றி எழுத முடியாது. அது, நீதிபதிகளுக்குத் தெரியும்; ஆனால், அரசியல்வாதிகளுக்கு இந்த உண்மை கசக்கிறது!