Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வருடமலர்/2022 மே-ல் நடந்த நிகழ்வுகள்

2022 மே-ல் நடந்த நிகழ்வுகள்

2022 மே-ல் நடந்த நிகழ்வுகள்

2022 மே-ல் நடந்த நிகழ்வுகள்

PUBLISHED ON : ஜன 01, 2023


Google News
Latest Tamil News
தமிழகம்

மே3: இலங்கை மக்களுக்கு தி.மு.க., சார்பில் ரூ. 1 கோடி உதவி.

மே5: அரசு பஸ்சில் 5 வயது வரை இலவசமாக செல்ல அனுமதி.

புனிதர் பட்டம்: மே15: கன்னியாகுமரியில் 18ம் நுாற்றாண்டில் வாழ்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு இத்தாலியின் வாடிகனில் 'புனிதர்' பட்டம் வழங்கப்பட்டது.

மே18: தேனி அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.

பட்டின பிரவேசம்: மே22: மயிலாடுதுறை தருமபுர ஆதினம் பட்டின பிரவேசம் நடந்தது.

மே24: ஜூனுக்கு பதிலாக மேமாதத்தில் மேட்டூர் அணை பாசனத்துக்கு திறப்பு.

மே26: சென்னையில் ரூ.31,530 கோடி திட்டப்பணிகளை பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் துவக்கினர். மதுரை - தேனி ரயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டது.

மே27: ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு.

புதிய தலைமை: மே28: பா.ம.க.,வின் தலைவராக அன்புமணி பதவியேற்பு.

இந்தியா

மே1: ராணுவ துணை தளபதியாக பி.எஸ்.ராஜூ பதவியேற்பு.

*வெளியுறவு துறை செயலராக வினய் மோகன் வத்ரா நியமனம்.

மே2: கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு.

மே5: ஜம்மு & காஷ்மீர் சட்டசபை தொகுதி எண்ணிக்கை 83ல் இருந்து 90 ஆக உயர்வு. லோக்சபா தொகுதி 6ல் இருந்து 5 ஆக குறைப்பு.

மே10: குழந்தைகளுக்கு 'பெர்த்' வழங்கும் வசதி, லக்னோ மெயில் ரயிலில் அறிமுகம்.

மே13: டில்லி வணிக வளாக தீ விபத்தில் 27 பேர் பலி.

மே15: திரிபுரா முதல்வராக மாணிக் சாஹா பதவியேற்பு.

*தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் பதவியேற்பு.

மே17: இந்தியாவில் தயாரான 'சூரத்', 'உதயகிரி' போர்க்கப்பல்கள் அறிமுகம்.

மே21: மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் ரூ. 7 குறைத்தது.

மே25: காங்கிரசில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் விலகல்.

*காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு டில்லி என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

மே28: உலகின் முதல் 'நானோ' யூரியா ஆலையை பிரதமர் மோடி, குஜராத்தில் திறந்து வைத்தார்.

உலகம்

மே1: அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., வின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளி நந்த் முல்சந்தானி நியமனம்.

மே4: ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்.

வானமேஎல்லை: மே4: உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், (கடல் மட்டத்திலிருந்து 28,970 அடி) வானிலை நிலையம் அமைத்து சீனா சாதனை.

மே6: உலகில் முதன்முறையாக குரங்கு அம்மை பாதிப்பு லண்டனில் பதிவானது.

மே8: எவரெஸ்டில் 26வது முறையாக ஏறி நேபாளத்தின் கமி ரீட்டா சாதனை.

மே10: தென்கொரிய அதிபராக யூன் சுக் யோல் பதவியேற்பு.

*ஹங்கேரியின் முதல் பெண் அதிபராக கடாலின் நோவக் பதவியேற்பு.

மே12: இலங்கை இடைக்கால பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்ரமசிங்கே பதவியேற்பு.

மே14: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக ஷேக் முகமது பின் அல் நஹ்யான் பதவியேற்பு.

நீளமான தொங்கு நடை பாலம்: மே14: செக் குடியரசில் உள்ள ஸ்லாம்னிக் - கிலம் மலை இடையே உலகின் நீளமான (2365 அடி) தொங்கு நடை பாலம் திறப்பு.

மே15: சோமாலியா அதிபராக ஹசன் ஷேக் முகமது பதவியேற்பு.

மே16: பிரான்ஸ் பிரதமராக எலிசபெத் போர்னி பதவியேற்பு.

மே18: தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள அதிபர் மாளிகையை (புளூ ஹவுஸ்) மக்கள் பார்வையிட 74 ஆண்டுக்குப்பின் அனுமதி.

மே22: ஆஸ்திரேலிய பிரதமராக அந்தோணி ஆல்பனிஸ் பதவியேற்பு.

*கிழக்கு திமோர் அதிபராக ஜோஸ் ரமோஸ் ேஹார்தா பதவியேற்பு.

மே23: சோமாலியா அதிபராக ஹாசன் ேஷக் முகமது பதவியேற்பு.

மே25: உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் பதவியேற்பு.

நெஞ்சம் தகர்ந்தது: மே25: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண துவக்கப்பள்ளியில், இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 19 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி.

மே26: பயனர்களின் தகவலை விற்ற வழக்கில் 'டுவிட்டர்' நிறுவனத்திற்கு ரூ.1165 கோடி அபராதம்.

மே29: நேபாள விமான விபத்தில் 22 பேர் பலி.

டாப் 4

மே7: 8000 மீட்டர் உயரமான 5 சிகரங்களில் (கஞ்சன்ஜங்கா, எவரெஸ்ட், லோட்சே, மக்காலு, கிளிமஞ்சாரோ) ஏறி மஹாராஷ்டிராவின் பிரியங்கா சாதனை.

மே11: ஹரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா 87, பிளஸ் 2 தேர்வில் வெற்றி.

மே18: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

மே25: இந்தியாவின் முதல் பெண் போர் விமானியானார் கேப்டன் அபிலாஷா பராக்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us