PUBLISHED ON : ஜன 01, 2023

தமிழகம்
ஜன.4: அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட 2000 மினி கிளினிக் மூடல்.
ஜன.5: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் துவக்கம்
*மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது. ஜன. 13ல் ஜாமினில் விடுதலை.
ஜன.10: தமிழக உளவுத் துறையின் முதல் பெண் ஐ.ஜி., யாக ஆசியம்மாள் நியமனம்.
ஜன.11: மதுரையில் கலைஞர் நினைவு நுாலகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல்.
மருத்துவம் மகத்துவம்: ஜன.12: திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உட்பட 11 மருத்துவ கல்லுாரிகளை காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவக்கினார்.
ஜன.19: கிராமங்களில் பணியாற்றும் அரசு டாக்டர் களுக்கு முதுநிலை படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஜன.22: சென்னை மேட வாக்கம் - சோழிங்கநல்லுார் இணைப்பு சாலைக்கு 'செம்மொழி சாலை' என பெயர் மாற்றம்
ஜன.23: சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இந்தியா
ஜன.1: ஜம்முவில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலில் நெரிசல். 12 பேர் பலி.
ஜன.3: இந்தியாவில் 15 - 18 வயதினருக்கு 'கோவாக்சின்' தடுப்பூசி பணி துவக்கம்.
ஜன.4: எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவன முதல் பெண் தலைவராக அல்கா மித்தல் நியமனம்.
ஜன.6: லோக்சபா தேர்தலில் வேட்பாளர் செலவிடும் தொகை ரூ. 70ல் இருந்து ரூ. 95 லட்சமாக உயர்வு.
ஜன.9: சைப்ரஸ் நாட்டில் ஒமைக்ரான்-டெல்டா இணைந்த 'டெல்டாக்ரான்' வகை கொரோனா கண்டுபிடிப்பு.
ஜன.10: இந்தியாவில் முன்கள பணியாளர், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 'பூஸ்டர்' தடுப்பூசி செலுத்தும் திட்டம் துவக்கம்.
ஜன.12: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவராக சோம்நாத் நியமனம்.
ஜன.13: மேற்கு வங்கத்தில் ஜல்பாய்குரி மாவட்டத்தில் ரயில் தடம் புரண்டதில் 9 பேர் பலி.
பிரமிக்கும் பிரம்மோஸ்: ஜன.15: இந்தியாவிடம் இருந்து ரூ.2770 கோடி மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணை வாங்க பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம். இது 700 கி.மீ., துாரம் சென்று தாக்கும்.
ஜன.17: தடுப்பூசி திட்டத்தின் ஒரு வருடம் நிறைவு. சிறப்பு தபால் தலையை மத்திய அரசு வெளியிட்டது.
ஜன.21: இந்தியாவுக்கு எதிராக தவறான தகவல் பரப்பிய பாகிஸ்தானின் 35 'யூடியூப்' சேனல், இரு இணைய தளத்துக்கு மத்திய அரசு தடை.
தியாக தீபம்: ஜன.21: டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், 1971 போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்காக அமர்ஜவான் அணையா தீபம் ஏற்றப்பட்டது.
கொடி பறக்குது: ஜன.26: காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் மணிக்கூண்டில் 30 ஆண்டுக்குப்பின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
ஜன.27: டாடா நிறுவனத்திடம் 'ஏர் இந்தியா' அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பு.
*ஆந்திராவில் 13ல் இருந்து 26 ஆக மாவட்டங்களின் எண்ணிக்கை உயர்வு.
ஜன.28: இந்திய தலைமை பொருளாதார ஆலோசகராக அனந்த நாகேஸ்வரன் நியமனம்.
*இந்திய கப்பல் படையில் உள்நாட்டில் தயாரான 'ஏ.எல்.எச்., - எம்.கே., 3' இலகு ரக ஹெலிகாப்டர் சேர்ப்பு.
ஜன.30: மணிப்பூரில் முதன் முறையாக சரக்கு ரயில் சேவை (சில்சர் - பொங்கைகங்பாவ்) துவக்கம்.
உலகம்
ஜன.7: இருதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகில் முதன்முறையாக அமெரிக்காவில் டேவிட் பென்னெட்டுக்கு 57, பன்றி இருதயம் பொருத்தப்பட்டது. மார்ச் 8ல் இவர் உயிரிழப்பு.
சிறை பறவை: ஜன.10: வாக்கிடாக்கி இறக்குமதி வழக்கில், மியான்மர் தே.ஜ., கட்சி தலைவர் ஆங் சான் சூச்சிக்கு நான்கு வருடம் சிறை.
ஜன.15: தெற்கு பசிபிக் கடலில் 'டோங்கா' எரிமலை புகை 1.60 லட்சம் அடி (48 கி.மீ.,) உயரம் சென்றது.
ஜன.17: அபுதாபியில் ஆயில் டேங்கர், விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர் நடத்திய 'டிரோன்' தாக்குதலில் 2 இந்தியர் உட்பட மூவர் பலி.
ஜன.19: ஐரோப்பிய பார்லிமென்ட் தலைவராக ராபர்டா மெட்சொலா தேர்வு.
*சூடான் பிரதமராக ஒஸ்மான் ஹூசைன் பதவியேற்பு.
*இந்தோனேஷிய தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து போர்னியோ தீவுக்கு மாற்ற முடிவு. புதிய தலைநகரின் பெயர் 'நுசாந்தரா'.
பலமான பாலம்: ஜன.19: துபாயில் 'இன்பினிட்டி' மேம்பாலம் திறப்பு. 12 வழிச்சாலையான இதில் ஒரு மணி நேரத்தில் 24 ஆயிரம் வாகனங்கள் செல்லலாம்.
ஜன.28: மத்திய அமெரிக்க நாடான ஹேண்டுராசின் முதல் பெண் அதிபராக ஷியோமரா காஸ்ட்ரோ பதவியேற்பு.
டாப் 4
ஜன.5: பாதுகாப்பு குளறுபடியால் பஞ்சாப் பயணத்தை பாதியில் ரத்து செய்து டில்லி திரும்பினார் பிரதமர் மோடி.
ஜன.21: பாக்., உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமனம்.
ஜன.26: தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் கவர்னரான தமிழிசை ஒரே நாளில் இரு இடத்திலும் தேசியக்கொடி ஏற்றினார். இது இந்தியாவில் முதன் முறை.
ஜன.26: குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்தி இடம்பெறவில்லை.