PUBLISHED ON : ஜூன் 28, 2025

என் வயது, 59; டில்லி தமிழ்க் கல்வி கழக பள்ளியில் படித்தேன். சிறுவர்மலர் இதழை தொடர்ந்து வாசித்து வருகிறேன். பொது அறிவை வளர்த்து மேன்மையடைய உதவிவருகிறது. இதழ் கையில் கிடைத்ததும், புதிர் பக்கத்துக்கான விடையை கண்டு பிடித்த பின் தான், மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவேன். என் கணவரும், மகனும் இந்த பகுதியில் ஏற்கனவே பரிசு வாங்கிவிட்டதால் போட்டி மனதுடன் அணுகுவேன்.
சிறுகதையை அக்கம் பக்கத்தவருக்கு படித்து காண்பிப்பேன். ஓவியங்களால் நிறைந்த, 'உங்கள் பக்கம்!' பகுதியை கத்தரித்து வைத்துக் கொள்வார் என் அம்மா. அவருக்கு மிகவும் பிடித்த பகுதி அது. உணவு செய்முறையை கற்பிக்கும், 'மம்மீஸ் ஹெல்த் கிச்சன்!' படித்து சிற்றுண்டிகள் செய்து உற்றார், உறவினர்களுக்கு கொடுப்பதை தவறாமல் கடைபிடித்து வருகிறேன்.
சுட்டிகளின் சிங்கார படங்கள், 'குட்டி குட்டி மலர்கள்!' பக்கத்தில் கட்டியணைக்க துாண்டுகின்றன. என் கடிதங்களை, 'வாசகர் பகுதி!' யில் பலமுறை கண்டு கர்வம் அடைந்துள்ளேன். குடும்பத்தில் அனைவரும் எழுதி பரிசு வாங்கியுள்ளோம். சிறுவர்மலர் இதழ் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் என்றால் மிகையாகாது.
- அன்னபூரணி ரவி, பெங்களூரு.
தொடர்புக்கு: 96201 89403