PUBLISHED ON : மே 17, 2025

என் வயது, 39; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக வாசிக்கிறேன். புதிர் போட்டியில் கலந்து ஆறுதல் பரிசு பெற்ற போதுதான் சிறுவர்மலர் இதழில் என் முதல் அத்தியாயம் துவங்கியது. அடுத்து, 'ஸ்கூல் கேம்பஸ்' பள்ளி அனுபவக் கடிதம் எழுதியதன் வாயிலாக எழுத்தாளராக அறிமுகமானேன். பலவித அனுபவங்களையும் கடிதங்களாக எழுதி பிரபலமானேன்.
சிறுவர்மலர் இதழுடன் தொடர்பு ஏற்பட்டதால், பிரபல தமிழ் எழுத்தாளர்களுடன் அறிமுகமும் கிடைத்துள்ளது. அதுவே, பிற இதழ்களுக்கு எழுத ஊக்குவித்தது. சிறுவர்மலர் இதழில், மொக்க ஜோக்ஸ், உங்கள் பக்கம் என அனைத்து ஆக்கங்களும் அற்புதமாக உள்ளன.
சனிக்கிழமை சிறுவர்மலர் படிப்பது என்ற நிலை உருவாகியுள்ளதால் குதுாகலத்துக்கு பஞ்சமில்லை. தமிழகம் மற்றும் அண்டை மாநிலத்தவருக்கு என்னை அறிமுகப்படுத்திய சிறுவர்மலர் இதழை என்றும் மறவேன்.
- ஆர்.ராஜ்மோகன், விழுப்புரம்.
தொடர்புக்கு: 85249 06220