Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கம்பு வடை!

கம்பு வடை!

கம்பு வடை!

கம்பு வடை!

PUBLISHED ON : ஜூன் 15, 2024


Google News
Latest Tamil News
தேவையான பொருட்கள்:

கம்பு மாவு - 500 கிராம்

கோதுமை மாவு - 2 மேஜை கரண்டி

எள் - 2 தேக்கரண்டி

தயிர் - 0.5 கப்

உப்பு, எண்ணெய், இஞ்சி, பச்சை மிளகாய், தண்ணீர் - தேவையான அளவு

மஞ்சள் துாள், மிளகாய்துாள், பெருங்காயத்துாள் - சிறிதளவு.

செய்முறை:

கம்பு, கோதுமை மாவுகளுடன் எண்ணெய், இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், அரைத்த எள், தயிர், மஞ்சள் துாள், மிளகாய் துாள், பெருங்காயத்துாள், உப்பு சேர்க்கவும். இந்த கலவையில் தண்ணீர் ஊற்றி, நன்றாக பிசைந்து, இரண்டு மணி நேரம் ஊற விடவும்.

பின், மாவை, சிறிய உருண்டைகளாக்கி வடையாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவை மிக்க, 'கம்பு வடை' தயார். ஆரோக்கியம் தரும். அனைத்து வயதினரும் விரும்புவர்.

- ரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us