Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இசைப்பயிற்சி!

இசைப்பயிற்சி!

இசைப்பயிற்சி!

இசைப்பயிற்சி!

PUBLISHED ON : ஜூன் 15, 2024


Google News
Latest Tamil News
துாத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம், புதுார் போர்டு உயர்நிலைப் பள்ளியில், 1960ல், 9ம் வகுப்பு படித்தேன்.

அன்று ஆண்டு விழா பாட்டுப் போட்டிக்கான அறிவிப்பு வந்தது. அதில் பங்கேற்கும் தகுதியிருப்பதாக எண்ணவில்லை. எனவே, பெயரை பதிவு செய்வதை தவிர்த்து விட்டேன். இதை கவனித்த தலைமையாசிரியர் வைத்திலிங்கம் அழைத்து விசாரித்தார். பணிவுடன், 'ஒரு சுருதி பெட்டி கூட என்னிடம் இல்லை. போட்டி போட திறனும் கிடையாது...' என சொன்னேன்.

புன்னகைத்தவாறே, 'உன் இனிய குரலே போட்டியிட உதவும். பெயரை பதிவு செய். வெற்றி நிச்சயம்...' என வாழ்த்தி அனுப்பினார். அதன்படி, பங்கேற்று பரிசு பெற்றேன்.

படிப்பை முடித்து, திருமணத்துக்கு பின், ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ெஷட்பூர் நகரில் குடியேறினேன். அங்கு, திருப்பாவை, திருவெம்பாவை, பாரதியார் பாடல்களை பாடும் பயிற்சியை குழந்தைகளுக்கு கொடுத்தேன். போட்டிகளில் பரிசுகள் பெற்றது மகிழ்ச்சி தந்தது.

இப்போது என் வயது, 80; இல்லத்தரசியாக இருக்கிறேன். இன்றும், சிறுவர், சிறுமியருக்கு ஸ்லோகங்கள் கற்றுத்தருகிறேன். என் இசைத் திறமையை வெளிக்கொணர்ந்த அந்த தலைமை ஆசிரியர் அருளால் இது நடக்கிறது. அவரை போற்றி வணங்குகிறேன்.

- ஜி.லலிதா சங்கர், சென்னை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us