Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

PUBLISHED ON : ஜூன் 08, 2024


Google News
Latest Tamil News
என் வயது, 63; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். ஒவ்வொரு வாரமும், சிறுவர்மலர் படிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். அட்டையில் வெளிவரும் குழந்தை புகைப்படத்தை கண்டதும், குதுாகலம் பொங்கும். பள்ளிப்பருவ நாட்களின் அனுபவத்தை சொல்லும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி படிக்க இனிமையானது.

குழந்தைகளின் கைவண்ண ஓவியங்களை, 'உங்கள் பக்கம்!' தந்து வியப்பு ஏற்படுத்துகிறது. சிறுகதைகளின் முடிவில் சொல்லப்படும், நீதி கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது. குழந்தைகளுக்கு, கதைகளை சொல்லி மகிழ்வித்து அறிவூட்டுவதை வழக்கமாக்கியுள்ளேன்.

மனம் விட்டு சிரிக்க, 'மொக்க ஜோக்ஸ்!' பயன்படுகிறது. சிறந்த தகவல் களஞ்சியமாக உள்ளது, 'அதிமேதாவி அங்குராசு!' பகுதி. அனைவருக்கும் நல்வழிகாட்டுகிறது, 'இளஸ்... மனஸ்...' அறிவுரைகள். ஆரோக்கியமான, எளிய சத்துணவு வகைகளை சமைக்க, 'மம்மீஸ் ெஹல்த்தி கிச்சன்!' கற்று தருகிறது. நேசத்துக்குரிய சிறுவர்மலர் இதழுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.



- வி.சி.கிருஷ்ணரத்னம், சென்னை.

தொடர்புக்கு: 97890 82664






      Our Apps Available On




      Dinamalar

      Follow us