PUBLISHED ON : ஏப் 27, 2024

உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒருமுறை அவர் போட்ட புதிர் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அப்படி என்ன புதிர் என்கிறீர்களா...
'ஒரு வீட்டின் நான்கு திசைகளுமே தெற்கு என எடுத்துக்கொள்ளுங்கள்; அந்த வீட்டின் ஜன்னலுக்கு வெளியே ஒரு கரடி நடமாடுகிறது. அதன் நிறம் என்னவாக இருக்கும்...'
இதற்கு விடை தெரியாமல் பலரும் குழம்பி நின்றனர். முடிவில், புதிரை அவிழ்த்தார் ஐன்ஸ்டீன்.
'உலகின் உச்சியாகக் கருதப்படுவது, 'ஆர்க்டிக்' என்ற வட துருவம். அந்த பகுதியில் இருக்கும் வீட்டின் நான்கு திசைகளும் தெற்காகவே இருக்கும். அங்கு துருவக் கரடி என்ற விலங்கு தான் உண்டு. ஜன்னலுக்கு வெளியே நடமாடினால் அது துருவக் கரடியாகத்தான் இருக்க வேண்டும். அதன் நிறம் வெண்மை...'
புதிருக்கான விடையை விளக்கினார் ஐன்ஸ்டீன்.
- மோகன ரூபன்