தேனி மாவட்டம், கம்பம், புதுப்பட்டி சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளியில், 1967ல், 4ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியராக இருந்தார் சுந்தராஜ். அன்று என்னை அழைத்து, 'தலைமை ஆசிரியர் செல்லையாவிடம், 'பிஏபிஇஆர்' வாங்கி வா...' என்றார்.
விளக்கம் ஏதும் கேட்காமல் நேராக சென்று அந்த ஆசிரியர் கூறியபடி சொன்னேன். சிரித்தபடி, 'அப்படி என்றால் என்ன...' என வினவினார் தலைமை ஆசிரியர். குழப்பத்துடன், 'தெரியாது ஐயா...' என கூறினேன்.
என்னை அரவணைத்தபடி அன்றைய செய்தித்தாளை கொடுத்து, 'கேட்டது இதைத்தான்... நாலாபுறமும் உள்ள செய்திகளை தரும், 'பேப்பர்' என்ற சொல்லின் ஆங்கில எழுத்துகள் தான் அவர் கூறியது...' என புரிய வைத்தார். தெளிவு பெற்றேன்.
தற்போது, என் வயது, 65; தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். செய்தி இதழ்களை எங்கு பார்த்தாலும், அந்த தலைமை ஆசிரியர் முகம் நினைவில் நிழலாடுகிறது.
- தே.மாதவராஜ், தேனி.
தொடர்புக்கு: 98422 97733