பைகுந்தபூர் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தான் போகன். வறுமை நிறைந்த குடும்பத்தை சேர்ந்தவன். பொருள் தேடுவதற்காக நடந்தான். எதுவும் கிடைக்காததால் மிகவும் களைத்திருந்தான். பசியால் மயக்கம் வந்தது.
காட்டு வழியில் கோடாரியுடன் அமர்ந்திருந்தார் ஒரு மூதாட்டி.
போகனை கண்டதும், ''தம்பி... எனக்கு ஒரு உதவி செய்வாயா...'' என கேட்டார்.
''கேளுங்கள் பாட்டி...''
''இந்த கூர்மையான கோடாரியால், பசுமையான அந்த மரத்தை வெட்டிப் போடு. அது காய்ந்ததும், எரிப்பதற்கு விறகாக்கி கொள்கிறேன்; கூலியாக என் காதில் தொங்கும் தங்க பாம்படங்களில் ஒன்றை தருகிறேன்...''
''மலை போல தங்கம் தந்தாலும், மழை பொழிய துணை நிற்கும் பச்சை மரத்தை வெட்ட மாட்டேன். காய்ந்து நிற்கும் மரத்தை கண்டுபிடித்து வெட்டி தருகிறேன். அதை விறகாக்கி கொள்ளுங்கள்...''
''எனக்கு பச்சை மரம் தான் வேண்டும். அதுவும் இந்த மரத்தை தான் வெட்ட வேண்டும். தங்க பாம்படத்தின் மதிப்பு உனக்கு தெரியுமா... நல்ல விலை பெறும்...''
மரத்தை சுட்டி காட்டியது மட்டுமின்றி, ஆசை வார்த்தையும் கூறினார் மூதாட்டி.
''முடியவே முடியாது...''
மறுப்பு தெரிவித்ததுடன் உறுதியாக நின்ற போகனின் நேர்மையை பார்த்து வியந்தார் மூதாட்டி. திடீரென அழகிய தேவதையாக வடிவம் எடுத்து, 'உன்னை சோதிப்பதற்காகவே மூதாட்டி வேடம் தரித்து வந்தேன். மழை பொழிய துணை நிற்கும் மரங்களை வெட்ட மாட்டேன் என்றாய். உன் உயர்ந்த குணத்தை பாராட்டி, பரிசு தருகிறேன்...' என்றபடி, நாணயங்கள் நிறைந்த மஞ்சள் துணிப்பை ஒன்றை தந்து மறைந்தது தேவதை.
தங்க நாணயங்களோடு, மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான் போகன்.
பட்டூஸ்... மரங்களை வெட்டி, இயற்கையை அழிக்க ஒருபோதும் துணை நிற்க கூடாது!
எஸ்.டேனியல் ஜூலியட்