Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஓலை எழுத்து!

ஓலை எழுத்து!

ஓலை எழுத்து!

ஓலை எழுத்து!

PUBLISHED ON : பிப் 24, 2024


Google News
Latest Tamil News
கோவை மாவட்டம், ஓடையூர் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியில், 1960ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...

மாணவ, மாணவியரின் கையெழுத்து அழகாக, தெளிவாக, மற்றவர்கள் புரிந்து படிக்கும்படி இருக்க வேண்டும் என வலியுறுத்துவார் வகுப்பாசிரியர் ராமசாமி. அதற்கு போதிய பயிற்சியும் தந்தார்.

அன்று வீட்டுப்பாட நோட்டுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். தெளிவற்ற எழுத்துக்களை பார்த்ததும், 'யாருமே புரியும் வண்ணம் வடிவாக எழுதவில்லை; எல்லாமே கிறுக்கலாக உள்ளன. பண்டை காலத்தில் எழுதிய முறை குறித்து தெரிந்தவர்கள் கூறலாம்...' என்றார்.

அரக்கபரக்க முழித்தவர்கள் மத்தியில் இருந்து பயத்துடன் எழுந்து, 'ஐயா... பனை ஓலையில் ஆணியால் எழுதினர்...' என்று கூறினேன். மனம் திறந்து ஆமோதித்து, 'உனக்கு எப்படி தெரியும்...' என்று கேட்டார்.

நிதானமாக, 'எங்கள் வீட்டிற்கு வந்திருந்த ஜோதிடர், பனை ஓலைகளை கத்தரித்து, ஏதோ எழுதி, கட்டி வைத்திருந்தார். அவரிடம் கேட்டு அறிந்தேன்...' என்றேன். என்னை பாராட்டி, 'பனை ஓலைகளில், ஆணியால் எழுத, எவ்வளவு சிரமம் தெரியுமா... இப்போது, நோட்டு, பென்சில், பேனா என, வசதிகள் இருந்தும் தெளிவாக எழுத தவறுவது நியாயமா...' என அறிவு புகட்டினார். கவனம் செலுத்தி எழுதுவதாக உறுதியளித்தோம்.

என் வயது, 73; இல்லத்தரசியாக இருக்கிறேன். மாணவர்கள் மீது கவனம் செலுத்தி, படிக்கவும், எழுதவும் துாண்டிய ஆசிரியரை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்!

- பி.லட்சுமி, திருப்பூர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us