Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சுகம் தரும் மூலிகை சாறு!

சுகம் தரும் மூலிகை சாறு!

சுகம் தரும் மூலிகை சாறு!

சுகம் தரும் மூலிகை சாறு!

PUBLISHED ON : ஜன 27, 2024


Google News
Latest Tamil News
உயிரோட்டத்திற்கு தேவையான நுண்ணுாட்ட சத்துகள், மூலிகை மற்றும் காய்கறிகளில் உள்ளன. இவற்றை நேரடியாக சாப்பிடலாம். சாறாக்கி குடித்தால் எளிதில் ரத்தத்தில் கலந்து பலன் தரும்.

உடலுக்கு நன்மை தரும், மூலிகை மற்றும் காய்களை தெரிந்து கொள்வோம்...

கேரட் சாறு: ரத்தத்தில் அதிகரிக்கும் யூரிக் அமிலத்தை வெளியேற்றும். சிறுநீரக கற்களை அகற்றும். ஈரல் நோய்கள், ரத்த சோகை, மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும்.

முருங்கை இலை சாறு: நரம்பு கோளாறு தீரும். கண் நோய் குணமாகும்; சிறுநீர் எரிச்சல் சீராகும். ரத்தம், சிறுநீரில் சர்க்கரை அளவை கட்டுபடுத்தும்.

புதினா சாறு: மலச்சிக்கல் அகற்றும். வாய்வுத் தொல்லை, வயிற்றுக் கோளாறு போக்கும். சிறுநீர் பையில் கல் அடைப்பு போக்கும். குழந்தைகள் வயிற்றில் இருக்கும் பூச்சியை கொல்லும். நோய் எதிர்பாற்றலை வளர்க்கும்.

பீட்ரூட் சாறு: வாந்தியை போக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுக்கும்; தோல் அரிப்பு, நமைச்சலில் இருந்து பாதுகாக்கும்.

இஞ்சி சாறு: மறதி நோயை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும்; இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மூட்டுவலி பிரச்னை குணமாகும். பசியின்மை, செரியாமை பிரச்னையை சரி செய்யும்.

நலம் தரும் சாறுகளை பருகி ஆரோக்கியம் பேணுவோம்.

- எஸ்.ராமதாஸ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us