PUBLISHED ON : ஜன 13, 2024

பழங்கள் இயற்கை வழங்கியுள்ள அற்புத கொடை. நலம் தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன. அன்றாடம் வழக்கமான உணவுக்கு முன், பின் உண்ணலாம்.
அது பற்றி பார்ப்போம்...
நெல்லிக்கனி: பெருநெல்லி என அழைக்கப்படுகிறது. யுபோர்பியேசி என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்திய மருத்துவத்தில் வெகுவாகப் பயன்படுகிறது. சதைப் பற்றுடன், உருண்டையாக வெளிர் பசுமை, மஞ்சள் நிறமாக காணப்படும்.
புரதம், கொழுப்பு, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின், சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. பழந்தமிழ் இலக்கியங்களில் இதன் சிறப்பு சொல்லப்பட்டுள்ளது.
விளாம்பழம்: இது, பெரோனியா எலிபன்டம் என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் உடையது. கடிபகை, பித்தம், விளவு, வெள்ளி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இதில், புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், ரிபோபிளேவின் மற்றும் சர்க்கரைச் சத்துக்கள் அடங்கியுள்ளன. உணவுக்கு முன், பின் உண்ணலாம். நல்ல பசி உண்டாகும்.
பலாப்பழம்: முக்கனிகளில் ஒன்று. இதன் சுவைக்கு ஈடு இணையில்லை. தோல் கரடுமுரடாக இருந்தாலும், பழம் சுவையாக இருக்கும். கண்ணை கவரும் நிறத்தில் காணப்படும்.
இது ஊட்டச்சத்து மிக்கது. உடலுக்கு தேவையான வைட்டமின் - ஏ, சி, தயமின், பொட்டாஷியம், கால்ஷியம், நையாசின் மற்றும் துத்தநாகம் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதை உண்பதால் எலும்புகள் வலுவடையும். எலும்பு சம்பந்தமான நோய் வராமல் தடுக்கிறது.
அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் பழங்களை உண்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நல்வாழ்வு கிடைக்கும்.
- எஸ்.ராமதாஸ்