பீன்ஸ், பட்டாணி தாவர வகையை சேர்ந்தது நிலக்கடலை. கி.பி.,16ம் நுாற்றாண்டில் தான் உலகம் எங்கும் பரவியது. இதன் தாயகம் தென் அமெரிக்க நாடான பிரேசில். ஐரோப்பியரான போர்ச்சுகீசியர் பல நாடுகளுக்கும் எடுத்து சென்றனர். அப்படி நம் நாட்டுக்கும் விருந்தாளியாய் வந்து வேர் விட்டது.
பூமிக்கடியில் தலை வைத்து, வெளியே இலை விடுவதால் வேர்க்கடலை என்ற பெயரும் உண்டு. மாமிசம், முட்டை, காய்கறி உணவுகளை விட புரதச்சத்து அதிகம். புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் போன்ற சத்துக்கள் உடையது. அற்புத மருத்துவ குணங்களுடன் விளங்குகிறது.
இதில் உள்ள எண்ணெய் சத்து, எளிதில் ஜீரணமாக கூடியது. மலம் இளக்கியாகவும், சருமத்துக்கு பளபளப்பையும் அளிக்கும்.
வறுத்த வேர்க்கடலையை, வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அவித்தும் தின்னலாம்.
உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் இதை சாப்பிட்டால் மறையும். நெஞ்சு சளியை நீக்கும். தொற்று நோய், ஹெபடைடிஸ், காசநோயிலிருந்து காப்பாற்றும். தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கை குறைக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்.
- நாகூர் மீரன்