/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு - காலண்டரின் கதை!அதிமேதாவி அங்குராசு - காலண்டரின் கதை!
அதிமேதாவி அங்குராசு - காலண்டரின் கதை!
அதிமேதாவி அங்குராசு - காலண்டரின் கதை!
அதிமேதாவி அங்குராசு - காலண்டரின் கதை!
PUBLISHED ON : டிச 30, 2023

வண்ண வண்ணமாய் வடிவமைக்கப்படுகிறது காலண்டர் என்ற நாட்காட்டி. இன்று, டிஜிட்டல் வடிவில் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. காலநிலையில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே, பழங்காலத்தில் நாட்காட்டி உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்தது.
ஆப்ரிக்காவில் பாயும் நைல் நதியில் வெள்ளப்பெருக்கை கணக்கிட ஒருவகை நாட்காட்டியை உருவாக்கியிருந்தனர் புராதன எகிப்தியர்.
உலகம் முழுதும், 'காலம், நேரத்தை கணக்கிடுவது கடவுள் விவகாரம்; அதில் தலையிடுவது தவறு' என்ற நம்பிக்கை நிலவியதால், பழங்காலத்தில் மாற்றங்கள் விரைவாக நடக்கவில்லை. பின், அது சாதாரண இயந்திரவியல் கணிப்பு தான் என்ற அறிவு ஏற்பட்டபோது, மாற்றங்கள் விரைவானது. இந்தப் பின்னணியில் தான் இன்று பயன்படுத்தும் நாட்காட்டி உருவானது.
கத்தோலிக்க திருச்சபையில், தலைமை பொறுப்பு வகித்த போப் கிரிகோரி, 'கவுன்சில் ஆப் டிரென்ட்' என்ற குழுவை உருவாக்கினார். அப்போதைய அறிவியல் முன்னேற்ற அடிப்படையில், காலண்டரில் இருந்த பிழைகளை களைந்தது அந்த குழு. அந்த குழுவின் பரிந்துரைகள் நவீன சிந்தனைக்கு உட்பட்டதாக அமைந்தது. அப்படி உருவானது, கிரிகேரியன் காலண்டர் எனப்படுகிறது.
காலண்டரில் ஏற்படுத்திய மாற்றத்தை உடனடியாக எந்த நாடும் ஏற்கவில்லை. ஐரோப்பிய நாடான இங்கிலாந்தும், அமெரிக்காவும், பல ஆண்டுகளுக்கு பின் தான் ஏற்றன. இங்கிலாந்தின் காலனியாக நம் நாடு இருந்ததால் இங்கும் பரவியது. கடைசியாக, தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ், 1923ல் புதிய காலண்டரை அங்கீகரித்தது.
கிரிகேரியன் நாட்காட்டிக்கு அடிப்படை ஜூலியன் காலண்டர். இது கி.மு., 45ல் மன்னர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்டது. அந்த நாட்காட்டியில் இருந்த மாத பெயர்கள் தான், தற்போதும் கடைபிடிக்கப்படுகிறது.
மாதங்களுக்கான பெயர் வரலாறு குறித்து பார்ப்போம்...
ஜனவரி: ரோமானிய இதிகாசம், 'ஜானஸ் லானுயாரியஸ்' என்பவரை துவக்கத்தின் கடவுளாக குறிப்பிடுகிறது. இந்த பெயரே சுருங்கி, ஜனவரி என்றாகியுள்ளது.
பிப்ரவரி: லத்தீன் மொழி சொல்லான, 'பிப்ரேரியஸ்' என்பதில் இருந்து பிறந்தது. ரோமானியர், 'பெப்ரா' என அழைக்கப்படும் சுத்தப்படுத்தும் விழாவை கொண்டாடி வந்தனர். அந்த சொல்லில் இருந்து உருவானது. தமிழகத்தில் அறுவடை திருநாளான பொங்கலுக்கு முன், போகி கொண்டாடுவது போன்றது இந்த விழா.
மார்ச்: ரோமானியரின் போர்க்கடவுள் பெயர் மார்ஸி. இதில் இருந்து உருவானதே மார்ச் மாதம் என கூறப்படுகிறது.
ஏப்ரல்: இந்த பெயர் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. லத்தீன் மொழியில், 'திறப்பு' என்ற பொருள் தரும், 'அபேரிரே' என்ற சொல்லில் இருந்து உருவானதாக கருத்து உள்ளது.
ரோமானியர் ஐதீகப்படி மாத பெயர்கள் எல்லாம், கடவுளை சார்ந்தே துவங்குகின்றன. அதன்படி, வீனஸ் தேவதைக்கு உரியதாக ஏப்ரல் மாதம் கருதப்படுகிறது. கிரேக்கர்கள் வீனஸை, 'அப்ரோடைட்' என அழைத்தனர்.
மே: கிரேக்கக் கடவுளான, 'மாயியா' என்பதில் இருந்தே மே மாதம் வழங்கப்படுகிறது.
ஜூன்: பண்டைய ரோமானியர் வணங்கிய, ஜூபிடர் கடவுளின் மனைவி பெயர், 'ஜூனோ' என்பதாகும். இதிலிருந்தே, ஜூன் மாதம் பிறந்ததாக கூறப்படுகிறது.
ஜூலை: இது லத்தீன் மொழியில், 'கவிண்டிலஸ்' என அழைக்கப்பட்டது. இந்த மாதத்தில் தான் மன்னர் ஜூலியஸ் சீசர் பிறந்தார். அவர் பெயரால், ஜூலை என சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட்: அலெக்ஸாண்ட்ரியா நகரை வென்ற மன்னர் அகஸ்டஸ் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த மாதத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.
செப்டம்பர்: லத்தீன் மொழியில், ஏழு என பொருள் தருவது, 'செப்டம்' என்ற சொல். புராதன ரோமானிய காலண்டரில் ஏழாவது மாதத்திற்கு அந்த பெயர் வழங்கப்பட்டிருந்தது. அதையே கிரிகோரியன் காலண்டரும் பின்பற்றியுள்ளது.
அக்டோபர்: லத்தீன் மொழியில், 'எட்டு' எனப் பொருள் தரும், 'அக்டோ' என்ற சொல்லில் இருந்து பிறந்தது.
நவம்பர்: ஒன்பது என பொருள் தரும், 'நோவம்' என்ற லத்தீன் சொல்லில் இருந்து உருவானது.
டிசம்பர்: லத்தீன் மொழியில், 'பத்து' என்ற பொருள் தருவதால் ரோமக் காலண்டரில், பத்தாவது மாதமாக இருந்தது. கிரிகேரியன் காலண்டரில் வரிசை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுபோல் லத்தீன் மொழி எண், கடவுள் பெயர்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளன மாதங்கள். இது தவிர, உலகின் பல்வேறு பகுதிகளிலும், பல நாட்காட்டி முறைகள் அமலில் இருந்தன.
இந்திய நாட்காட்டியாக, 'சக' கருதப்படுகிறது. இந்தியாவின் வட பகுதியை ஆண்ட சாதவாஹன மன்னர் சாலிவாஹன், உஜ்ஜைனி மன்னர் விக்ரமாதித்தனை போரில் வென்றார். இதை அடுத்து, சக வருடம் துவங்கியதாக வரலாற்று குறிப்பு உள்ளது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.