PUBLISHED ON : ஏப் 12, 2025

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2012ல், 11ம் வகுப்பு படித்த போது தமிழாசிரியராக இருந்தார் வீரப்பன்.
மாணவியரிடம் அன்பாகவும், மரியாதையாகவும் பழகுவார். புத்தகத்தை பார்க்காமலே முழு பாடத்தையும் நடத்துவார். அன்றைய வகுப்பில், 'உங்களுக்கு பிடித்த காந்திஜி' என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடத்த போவதாக திடீரென அறிவித்தார்.
வகுப்பே திரண்டு, 'ஐயா, இன்று நாங்க தயாராக இல்லை. நாளை முன் தயாரிப்புடன் வருகிறோம்...' என்றோம். விடாப்பிடியாக, 'இனி படித்து எதுவும் பேசக் கூடாது... நீங்கள் இதுவரை காந்திஜி பற்றி தெரிந்திருப்பதை பேசினால் போதும்...' என கிடுக்கிப்பிடி போட்டார். நான் எழுந்து சில வார்த்தைகள் பேசினேன். பின், யாரும் வாய் திறக்கவில்லை.
உடனே சற்று இறங்கி, 'சரி... நாளை தயாராக வாருங்கள்...' என கூறி எழுந்து சென்று விட்டார் தமிழாசிரியர். இறுதி போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசுக்கு தேர்வானேன். அதற்கு கிடைத்த பரிசை தமிழாசிரியரிடம் காட்டியதும், 'இதன் மதிப்பு உயர்வானது. முதல் நாளே நீ தைரியமாக பேசியதால், சிறந்த பரிசை வழங்க தலைமையாசிரியரிடம் நான் தான் பரிந்துரை செய்தேன்...' என பாராட்டினார். அந்த செயல் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
இப்போது, என் வயது, 29; தமிழக காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக உள்ளேன். உயர்வுக்கு வழிவகுத்து ஊக்கப்படுத்திய அந்த தமிழாசிரியரை வணங்கி மகிழ்கிறேன்.
- பா.திருமலாதேவி, சிவகங்கை.
தொடர்புக்கு: 63744 47872