PUBLISHED ON : பிப் 01, 2025

நீளமான மூங்கில்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட பாலம், ஆசிய நாடான கம்போடியாவில் உள்ளது. இது, ஒவ்வொரு ஆண்டும் பிரித்து எடுக்கப்பட்டு, மீண்டும் உருவாக்கப்படுகிறது.
இந்த பாலம்...
* நீண்ட, 50 ஆயிரம் மூங்கில் குச்சிகளால் கட்டப்பட்டுள்ளது
* இதன் நீளம், 3,000 அடி
* கோ பேன் தீவை கம்போங் சாம் நகருடன் இணைக்கிறது
* மீகாங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது
* ஒவ்வொரு ஆண்டும் ஆற்றில் தண்ணீர் குறையும் போது, பிரித்து கட்டப்படுகிறது
* மழைக்காலம் வரும் முன், மூங்கில்களை பிரித்து பத்திரமாக அடுக்கி வைப்பர்.
மழை காலத்தில், படகு சேவை போக்குவரத்திற்கு போதுமானதாக இருக்கிறது. இதனால், பாலத்தில் மூங்கிலை பிரித்து, கோடையில், ஆற்றில் நீர் வற்றும் போது, திரும்பவும் கட்டுவர். ஆண்டிற்கு ஒருமுறை பிரித்து கட்டும் ஒரே பாலமும் இது தான்.
இதை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். உள்ளூர் வாசிகள் பாலத்தை கடக்க கட்டணம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு சுற்றுலா பயணியரிடம் சற்று அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில், 40 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறிய வாகனங்கள் செல்லும் வகையில், பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடை அதிகமானாலும், மூங்கில் வளைந்து, உடையாமல் ஈடுகொடுக்கிறது.
இதில் பயணம் செய்யும் போது ஊஞ்சல் ஆடுவதை போல இருக்கும். கார்கள் செல்லும் போது டயர்கள் அழுத்துவதால் எழும் ரீங்கார ஒலி வித்தியாசமாக இருக்கும்.
- வ.முருகன்