/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வெள்ளை முயலும், குள்ளநரிக் கூட்டமும்!வெள்ளை முயலும், குள்ளநரிக் கூட்டமும்!
வெள்ளை முயலும், குள்ளநரிக் கூட்டமும்!
வெள்ளை முயலும், குள்ளநரிக் கூட்டமும்!
வெள்ளை முயலும், குள்ளநரிக் கூட்டமும்!
PUBLISHED ON : மே 24, 2025

அடர்ந்த காட்டுப் பகுதியில் வழி தவறியது வெள்ளை முயல். அது குள்ள நரி கூட்டத்தில் சிக்கியது.
கொன்று தின்பதற்கு, சுற்றி வந்தன நரிகள்.
பயந்து செய்வதறியாது, முன்னங்கால்களை மடித்து, கண்ணீர் வடித்தவாறு அமைதியுடன் நின்றது முயல்.
முயலை உற்றுக் கவனித்தது நாட்டாமை நரி.
'நீ எப்படி, எங்கள் பகுதிக்குள் நுழைந்தாய்...'
அதட்டலுடன் கேட்டது நாட்டாமை நரி.
'என் தாய் மற்றும் சகோதரனை, வேட்டைக்காரன் பிடித்து சென்று விட்டான். தப்பி பிழைத்து, வழி தெரியாமல் இங்கு வந்தேன்...' என அழுது புலம்பியது.
நாட்டாமை நரி மனம் நெகிழ்ந்து, 'மிக அழகாகவும், புத்திசாலியாகவும் இருக்கிறது முயல். இதை எப்படியாவது அனுப்பி விடலாம்; ஆனால் உடனிருப்பவை அனுமதிக்காதே... என்ன செய்யலாம்' என மவுனமாக யோசனை செய்தது.
'என்ன பேச்சு வேண்டி கிடக்கு. பசி வந்து விட்டது; அடித்து, கொன்று சாப்பிடலாம்...'
ஆவேசத்துடன் கத்தின பிற நரிகள்.
'இதை அடித்துக் கொன்றால் கூட்டத்தில் யாருக்கும் பசி தீராது' என வெள்ளை முயலை கருணையுடன் பார்த்தபடி நின்றது நாட்டாமை நரி.
'என்ன யோசனை. நானே கொல்கிறேன்...'
கோபத்துடன் உடலை உலுக்கியது ஒரு வாலிப நரி.
'பொறு. இந்த முயலிடம் திறமை, புத்திசாலித்தனம் நிறைய உள்ளது போல் தெரிகிறது. அதனிடம் இருந்து நல்ல விஷயங்களை நம் குழந்தைகள் அறியட்டும்; பின், அதைக் கொன்று சாப்பிடலாம்...'
சமாதானப்படுத்தியது நாட்டாமை நரி.
'பசி வயிற்றை கிள்ளுது... நல்ல விஷயங்களை கற்கும் நேரமா இது...'
ஆவேசப்பட்டன நரிகள்.
வாக்குவாதத்திற்கு இடையே முயல் அருகில் சென்றது ஒரு குட்டி நரி. அதன் வாலை, முன்னங்கால்களால் தடவிப் பார்த்து ரசித்தது. தொடர்ந்து வந்த மற்றொன்றும் முயலுக்கு முன் சென்று, அதன் அழகான சிவந்த வாய் மற்றும் நீண்ட காதுகளை ஆச்சர்யத்துடன் பார்த்தது.
சிறிது நேரத்திற்கு பின் -
வெள்ளை முயல் மீது துள்ளி குதித்து, விளையாட ஆரம்பித்தன நரி குட்டிகள்.
அவற்றுடன் சேர்ந்து மகிழ்ச்சியில் உருண்டு புரண்டது முயல்.
'குழந்தைகளுடன் விளையாட நட்பு கிடைத்து விட்டது. முயலை கூட்டத்தில் வைத்துக் கொள்ளலாம்'
குட்டி நரிகளின் பெற்றோர் மனதில் இந்த எண்ணம் வந்தது.
அப்போது, 'முயலுடன் என்ன விளையாட்டு. ஒதுங்குங்கள்; அடித்து கொல்லப் போகிறேன்...' என ஆவேசத்துடன் வந்த வாலிப நரியை, தடுக்க முயன்றன குட்டி நரிகள்.
'தடுத்தால் உங்களையும் பசிக்கு விருந்தாக்கிவிடுவேன்...'
மிரட்டல் விடுத்தது வாலிப நரி. உடனே குறிக்கிட்ட தாய் நரி, 'என் குழந்தைகளை மிரட்டுவாயா... உன்னை, இந்த காட்டை விட்டே அடித்து, துரத்துகிறேன்...' என கோபத்தில் சத்தமிட்டது.
சண்டை முற்றிய நிலையில் அந்த இடத்தில் இருந்து நைசாக நழுவியது முயல்.
இதை கவனித்தும், கண்டு கொள்ளாமல் விட்டது நாட்டாமை நரி.
அடர்ந்த புதருக்குள் பதுங்கி, நரிகளின் சண்டையை கவனித்தது முயல்.
ஒருவழியாக சண்டை ஓய்ந்து சமாதானமாகி சுற்றும், முற்றும் பார்த்தது நரிக் கூட்டம். எங்கு தேடியும் முயல் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தன.
எதையும், கண்டுக்கொள்ளாமல் எழுந்து நடக்க ஆரம்பித்தது நாட்டாமை நரி. அதை, பின் தொடர்ந்து சென்றது கூட்டம்.
புதரில் இருந்து, வெளியேறி இருப்பிடம் நோக்கி துள்ளி குதித்து ஓடியது முயல்.
பட்டூஸ்... பணிவு, தைரியம், புத்திசாலிதனம் இருந்தால் எவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தாலும் சமாளிக்கலாம்.
- கே.ராஜ்மோகன்