PUBLISHED ON : ஏப் 05, 2025

நதிவழியில் உலகில் நீண்ட துாரம் பயணம் செய்யும் கப்பலின் பெயர் கங்கா விலாஸ். இது முதல் பயணத்தை, ஜனவரி 13, 2023ல் உத்தரபிரதேசம், வாரணாசியில் துவங்கியது. இந்த பயணம், 50 நாட்களில், 3,200 கி.மீ., துாரத்தை கடந்தது. பிப்ரவரி 28, 2023ல் அசாம், திப்ருகரில் நிறைவு பெற்றது.
கப்பல் பயணப் பாதையில், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்கள் உள்ளன. இது, 27 நதிகளில் பயணம் செய்கிறது.
இந்த கப்பல், மூன்று தளங்களையும், 18 சூட் அறைகளையும் உடையது. சுற்றுலாவிற்காக அண்டை நாடான வங்கதேசம் வழியாக செல்கிறது. அன்டாரா நிறுவனம் கப்பலை இயக்குகிறது.
- மு.நாவம்மா